இந்திய ராணுவ வீரரின் சாதனையை அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

18 வயதைக்கூட தொடாத ஓர் சிறுவன் ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்கின்ற வகையிலான ஓர் சம்பவத்தைச் செய்துள்ளார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் மஹாஜன். அடுத்த மாதம் தனது 18ம் வயதில் இவர் அடியெடுத்த வைக்க இருக்கின்றார். இந்த நிலையில், மிதிவண்டியின் மூலம் கின்னஸ் சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். இவர், சுமார் 3,600 கிமீ தூரத்திலான இடைவெளியை வெறும் 8 நாட்களில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

அதாவது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடங்கி நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரியை வெறும் எட்டு நாட்கள், 38 நிமிடங்களில் கடந்து சாதனைப் படைத்திருக்கின்றார். சனிக்கிழமை அன்றே மஹாஜனின் இந்த சாதனைப் பயணம் முடிவடைந்திருக்கின்றது.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

கடந்த வாரம் ஸ்ரீநகரின் குளிர்ச்சியான காலநிலையில் தொடங்கிய மஹாஜனின் இந்த சாதனைப் பயணம், மத்திய பிரதேசத்தின் கடுமையான மழை, தென்னகத்தின் அதிக வெப்பம் என அனைத்து பருவ நிலைகளையும் கடந்து தற்போது நிறைவைச் சந்தித்துள்ளது.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

முன்னதாக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு ஸ்ரீநகர்-கன்னியாகுமரி சாதனையை மஹாஜனின் மாமா மகேந்திரா மாஜனே மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது இவரின் சாதனையையே ஓம் மஹாஜன் முறியடித்திருக்கின்றார். அதேசமயம், ஓம் மஹாஜனுக்கு முன்னதாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேணல் பாரத் பன்னு எட்டு நாட்கள் மற்றும் ஒன்பது மணி நேரங்களில் இந்த சாதனையை மிறியடித்திருந்தார்.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

இவர்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் சைக்கிளை இயக்கி மிகக் குறைந்த நேரங்களில் ஓம் மஹாஜன் புதிய சாதனையை மேற்கொண்டிருக்கின்றார். இதற்காக, ஓய்வு-தூக்கம் போன்றவற்றை அவர் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 17 வயது சிறுவனின் இந்த சாதனைக்கு கேணல் பன்னு உட்பட உலக சாதனையாளர்கள் பலர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், ஓம் மஹாஜன் அமெரிக்கா கனவு தள்ளிபோயிருக்கின்றது. இவர், கன்சாஸ் பகுதியில் உள்ள ஓர் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சிக்கான பட்டபடிப்பை மேற்கொள்ள இருந்தது. ஆனால், இதற்கு கொரோனா வைரஸ் தடையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த இடைவெளியில் பயிற்சி மேற்கொள்ளும் விதமாகவே இந்த சாதனையை அவர் படைத்திருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய ராணுவ வீரரின் சாதனையையே அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?

இதுகுறித்து தொடர்ந்து அவர் கூறியதாவது, "நான் வெறும் இடைவெளியை மட்டும்தான் கடந்துள்ளேன். ஆகையால், என்னுடைய வெற்றி என்னுடைய குழுவிற்கே சேரும்" என்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து விரைவில் சவாலாலன 4,800 கிமீ சாலையை 12 நாட்களில் கடப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக ஓம் மஹாஜன் கூறியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
17 Year Old Boy Crosses Kashmir To Kanyakumari In 8 Days: Here More Details. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 16:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X