மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

கிளாசிக் லெஜண்ட்ஸ் அதன் புகழ்வாய்ந்த மோட்டார்சைக்கில் பிராண்டான யெஸ்டி பைக்குகளை மீண்டும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

இந்தியர்களின் மிகவும் பிரியமான பைக்குகளில் ஒன்றாக யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. ஆனால், இவை தற்போது விற்பனையில் இல்லை என்பது வருத்தமான தகவல். இருப்பினும், இந்த நிலை வெகுநாளுக்கு நீடிக்காது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

ஆமாங்க, யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை மீண்டும் களமிறக்க கிளாசிக் லெஜண்ட் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ஆங்கில தளமான ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 2022ம் நிதியாண்டில் யெஸ்டி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

இத்துடன், கிளாசிக் லெஜண்ட்ஸ் 650சிசி திறன் எஞ்ஜின் கொண்ட பிஎஸ்ஏ பிராண்ட் பைக்குகளை விற்பனைக்குக் களமிறக்கவும் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளாசிக் நிறுவனம் ஜாவா பிராண்டை மிக சமீபத்திலேயே புதுப்பித்து நாட்டில் அறிமுகப்படுத்தியது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகள் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இந்த நிலையிலேயே தனது மற்றும் இரு பிராண்டுகளான யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்ட் மோட்டார்சைக்கிள்களையும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

இந்த தகவல் இந்திய யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் மற்றுமொரு தகவலும் வெளியாகியிருக்கின்றன. அதாவது, அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னரே இந்த மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

இந்தியாவில் தற்போது யெஸ்டி பைக்குகளை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன பிரியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களைக் கவரும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும் யெஸ்டி பிராண்ட் மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

யெஸ்டி மோட்டார்சைக்கிளில் 293சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய லிக்யூடு கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதே எஞ்ஜினைதான் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளில் பயன்படுத்தி வருகின்றது.

மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது யெஸ்டி பைக்குகள்?.. குஷியில் 70ஸ், 80ஸ் கிட்ஸ்... ராயல் என்பீல்டு கதை என்னவாக போகுதோ!!

இந்த எஞ்ஜின் 27.51 பிஎஸ் மற்றும் 27.05 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இதேபோன்று, 650 சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய பவர்ஃபுல் எஞ்ஜினே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இவ்விரு மோட்டார்சைக்கிள்களும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு போட்டியளிக்கும் வகையில் நாட்டில் களமிறக்கப்பட இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Classic Legends Planning To Re-Introduce Yezdi & BSA Brand Motorcycles In India. Read In Tamil.
Story first published: Thursday, June 3, 2021, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X