Just In
- 7 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 11 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 12 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 12 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக் திருட்டை தவிர்ப்பது எப்படி... இந்த 6 சுலபமான வழிகளை கடைபிடிச்சு திருடர்களை அப்புறப்படுத்துங்க!!
பைக் திருட்டை தவிர்ப்பதற்கான ஆறு எளிய வழிமுறைகளை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

காவல்துறையையே மிரட்டும் வகையில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், வாகன உரிமையாளர்கள் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போன்று சிக்கலில் தவித்து வருகின்றனர். குறிப்பாக, வாகனங்களை பார்க் செய்ய முறையான பார்க்கிங் வசதி இல்லாத நபர்கள் இதைவிட மிகுந்த தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுபோன்ற தவிப்புகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையே இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். அதாவது, திருடர்களின் கைவரிசையில் இருந்து மோட்டார்சைக்கிளை காப்பது எப்படி என்பது பற்றிய டிப்ஸ்களையே இப்பதிவில் வழங்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

டிப்ஸ் 1:
பைக்கை சைடு லாக் செய்வது போல அதன் டிஸ்க்கையும் லாக்கும் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை தனியாக ஆஃப்டர் மார்க்கெட்டில் மட்டுமே தற்போது நம்மால் பெற முடிகின்றது. இது முழுமையான பிரேக்கிங் வசதியை தருவதனால் பைக்கை நகர்த்துவது என்பது இயலாத காரியமாக மாறிவிடும். இதன்மூலம் வாகன திருட்டை நிச்சயம் தவிர்க்க முடியும்.

டிப்ஸ் 2 :
டிஸ்க் பிரேக்கை பூட்டு போடுவதை போல் வாகனத்தின் எஞ்ஜினின் இயக்கத்தையும் முழுமையாக தவிர்க்க கூடிய கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, தீப்பொறியை உருவாக்கும் பிளக் கயர் அல்லது எரிபொருள் செல்லும் பாதையை பூட்டு போட்டு தடுத்தல் உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதன் வாயிலாக இருசக்கர வாகனத்தை திருடர்கள் ஸ்டார்ட் செய்வதை முழுமையாக தவிர்க்க முடியும். டோவ் செய்து இருசக்கர வாகனத்தை திருடுவது இயலாத காரியம் என்பதால், திருடர்கள் நிச்சயம் இதனைத் தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிப்ஸ் 3:
இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் எஞ்ஜின் இயக்கத்தை அணைக்கக் கூடிய ஸ்விட்சுகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற ஸ்விட்சை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைமுகமாக வைத்து பயன்படுத்தலாம்.

இதன் மூலம் நிச்சயம் திருடர்களை அலைக்கழிக்க முடியும். குறிப்பாக, போலி சாவி போட்டு எஞ்ஜினை ஆன் செய்ய முயற்சித்தாலும், அதனை தோல்வியடையச் செய்ய முடியும்.

டிப்ஸ் 4
உணவகம், சினிமா என வெளியே செல்லும்போது மட்டுமல்ல வீட்டிற்கு செல்லும்போதும்கூட பைக்கை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துகின்றோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், முறையான பார்கிங் இடங்களில் நிறுத்தப்படாத வாகனங்களே அதிகம் களவு செய்யப்படுகின்றன.

ஆகையால், இந்த இடங்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நிச்சயம் நம்முடைய வாகனங்களை நம்மால் கட்டிக் காக்க முடியும். குறிப்பாக, பார்க் செய்யும் இடம் பாதுகாப்பானாதா, அருகில் சிசிடிவி கேமிரா இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து பார்க் செய்வது சிறந்தது. இதுமட்டுமல்லாது முறையான பார்க்கிங் இடமாக தேடி பிடித்து வாகனங்களை பார்க் செய்வதன் வாயிலாக பைக்கை திருடர்களிடத்தில் இருந்து பத்திரமாக பாதுகாக்க முடியும்.

டிப்ஸ் 5
பார்க் செய்ய பாதுகாப்பான இடம் இல்லை இல்லை என்றால், அருகில் இருக்கும் திடமான கம்பி அல்லது உலோகத்துடன் இணைக்கும் வகையில் சங்கிலி போட்டு பூட்டுபோடுவது சிறந்தது. இதன்மூலம் திருட்டை நிச்சயம் தவிர்க்க முடியும். இல்லை எனில் உங்களுடன் வரும் நண்பரின் இருசக்கர வாகனத்துடன் இணைத்தவாறு சங்கிலி போட்டு பூட்டு போடுவதும் மிக சிறந்தது.

டிப்ஸ் 6
ஜிபிஎஸ் கருவி, இது இருந்தால் உங்கள் பைக் திருடப்பட்டிருந்தாலும் மிக குறுகிய நேரங்களில் கண்டுபிடித்த முடியும். அதாவது, உங்கள் பைக்கில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்குமானால், இக்கருவி இருக்கும் வாகனம் நாட்டின் (உலகின்) எந்த மூலையில் இருந்தாலும் நம்மால் தேடி கண்டுபிடித்த முடியும்.

எனவேதான் இக்கருவியை சமீப காலமாக வாகன உற்பத்தி நிறுவனங்களே வழங்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த கருவி இல்லாத வாகன உரிமைதாரர்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஜிபிஎஸ் கருவிகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.