ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்! இப்ப தேவை இல்லாம பைக் போச்சு! விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் தனது சொந்த செலவிலேயே தானக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கின்றார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

வாகன விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமே இந்த போக்குவரத்து விதிமீறல்கள்தான் என்ற கருத்து மிக வலுவாக மக்கள் அனைவரின் மத்தியிலும் இருந்து வருகின்றது. இருப்பினும், நம்மில் பலரே இதனை செய்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அதேசமயம், போக்குவரத்து விதிமீறல்களை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் காவல்துறையும் அதி திவீரம் காட்டி வருகின்றது.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

அதிலும், குறிப்பாக நமது அண்டை மாநிலமான கேரளாவில் வாகன விதிமீறல்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரையே அம்மாநிலத்தின் மோட்டார் வாகனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிறு தவறாக இருந்தாலும் வாகன சார்ந்து நடைபெறுமானால் அதற்கான நடவடிக்கையை உடனடியாக அவர்கள் எடுத்து வருகின்றனர்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

இந்த நிலையில், மிக சமீபத்தில் கொல்லம் மாவட்டத்தின் பரவூர் பகுதியில் இளைஞர் ஒருவர் விலையுயர்ந்த கேடிஎம் பைக்கில் ஸ்டண்ட் செய்து வந்திருக்கின்றனர். வாகனத்தில் முறையான நம்பர் பிளேட்டும் இல்லை என கூறப்படுகின்றது. இதன் காரணத்தினால் போலீஸார் அப்பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

பின்னர், ஒரு சில நாட்களிலேயே அபராதம் மட்டும் வசூல் செய்யப்பட்டு, பைக் மீண்டும் உரிமையாளரிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர்தான் கேடிஎம் பைக்கின் உரிமையாளருடைய லைசென்ஸை தற்காலிகமாக ரத்தும் செய்யும் பணியில் மோட்டார் வாகனத் துறை இறங்கியிருக்கின்றனர்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

வீட்டிற்கு போகும்போது அந்த இளைஞர் சும்மா போகாமல், மீண்டும் பைக் ஸ்டண்டில் ஈடுபட்டிருக்கின்றார். இதுகுறித்த வீடியோவை அவரே அவரது நண்பர் ஒருவர் வாயிலாக எடுத்து சமூக வலைதளத்திலும் வெளியிட்டிருக்கின்றார். இவ்வாறே சொந்த செலவில் தனக்கு தானே அவர் சூன்யம் வைத்திருக்கின்றார்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

இளைஞர் வெளியிட்ட வீடியோ மிக அதிக வேகத்தில் வைரலாகியிருக்கின்றது. போலீஸாரின் கண்களிலும் கேடிஎம் பைக் உரிமையாளரின் ஸ்டண்ட் காட்சிகள் பட்டிருக்கின்றன. "நாங்க, சும்மாவே காட்டு காட்டுணு காட்டுவோம். இதுல இது வேறயா" என கூறுவதைப் போல், போலீஸார் அதே பைக்கை மீண்டும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்திருக்கின்றனர்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

இந்த விநோத சம்பவம் குறித்த தகவலே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. விதிமீறல்களைக் குறைக்கும் நோக்கில் போலீஸார் இரு சம்பவங்களையும் (பைக்கர் ஸ்டண்ட் செய்தது மற்றும் அப்பைக்கை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்து வந்தது) ஒன்றிணைத்து ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

இதுமட்டுமின்றி, பைக்கில் ஒட்டப்பட்டிருந்த சந்தைக்கு பிறகான ஸ்டிக்கர்களை பைக்கின் உரிமையாளரைக் கொண்டே போலீஸார் கிழித்தெறிய செய்திருக்கின்றனர். இதைவிட மிக முக்கியமான நடவடிக்கையாக இளைஞரின் ஓட்டுநர் உரிமம் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒழுங்கா போயிருந்தா ஃபைனோட போயிருக்கும்... இப்போ தேவை இல்லாம பைக் போச்சு... விழுந்து விழுந்து சிரிக்கும் கேரளவாசிகள்!!

இதனால், குறிப்பிட்ட சில காலங்களுக்கு கேடிஎம் பைக் உரிமையாளர் எந்த வாகனத்தையும் இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இளைஞர் பயன்படுத்தியது கேடிஎம் ஆர்சி 200 பைக்கைப் போன்று உள்ளது. இப்பைக்கையே மீண்டும் போலீஸார் கைப் பற்றியிருக்கின்றனர். இந்த பைக் இந்தியாவில் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Image Courtesy: Manorama News

கேரள மோட்டார் வாகன துறை இதுபோன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவது முதல் முறையல்ல. சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோக்களின் அடிப்படையில் பல விதிமீறல் வாதிகளின் மீது கேரள மோட்டார் வாகனத் துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Seized Youngsters KTM Bike And suspended license: Here Is Why?.. Read In Tamil.
Story first published: Thursday, April 29, 2021, 10:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X