கோமகி எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு! அந்த நகரவாசிகள் கொடுத்து வச்சவங்க!

பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனமான கோமகி அதன் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விலையை ரூ. 20 ஆயிரம் வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

காற்று மாசு, சுற்றுச் சூழல் சுகாதார சீர்கேடை ஏற்படுத்துவதில் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகின்றது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

மக்கள் மத்தியில் மின் வாகனத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. வரி சலுகை, ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையிலேயே ஃபேம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மானியத்தை அதிகரிக்கச் செய்வதாக அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்தது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றன. ஏத்தர், ரிவோல்ட், ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டன.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது கோமகி நிறுவனமும் அதன் மின் வாகனங்களுக்கான விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. ஆனால், இந்த விலை குறைப்பை நிறுவனம் ஃபேம்2 திட்டத்தின்கீழ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

ஆமாங்க, நிறுவனம் பிரத்யேகமாக டெல்லிக்காக மட்டுமே விலைக்குறைப்பைச் செய்துள்ளது. ஆகையால், கோமகியின் விலை குறைப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

நிறுவனம் பிரத்யேகமாக டெல்லி வாசிகளுக்காக ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைப்பை செய்திருக்கின்றது. டிஎன்-95 எனும் புகழ்வாய்ந்த மாடலுக்கே இந்த உச்சபட்ச விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ரூ. 15 ஆயிரம் வரை எஸ்இ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

கோமகி நிறுவனம் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே தனது விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது. கேரளா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நிறுவனம் தனது மின்வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. தலைநகர் டெல்லியில் புதிய கிளைகளைத் திறக்கும் பணியிலும் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

இதுமட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் தனது விற்பனை விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கணிசமான அளவில் வரவேற்பு கிடைத்து வருகின்றது.

கோமகி மின்சார இருசக்கர வாகனங்களின் விலையில் ரூ. 20 ஆயிரம் வரை குறைப்பு... ஒன்றிய அரசின் அதிரடிதாங்க இதற்கு காரணம்...

கடந்த 2021ம் ஆண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 14,500க்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களை நாட்டில் விற்பனைச் செய்திருந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே விரைவில் புதிய கிளையை தொடங்க இருக்கும் டெல்லியில் விலை குறைப்பை அதிரடியாக கோமகி அறிவித்துள்ளது. இது டெல்லிவாசிகளைக் கணிசமாக கவர உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Komaki Announces Price Cut For Electric Scooter: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X