சிங்கிள் சார்ஜில் 470 கிமீ ஓடும்! வெறும் ஆறரை லட்சத்துக்கு எலெக்ட்ரிக் கார்! நாடு முழுக்க டெலிவரி தொடங்கியது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், லோகேஷ் கார் ரிவியூஸ் என்ற யூடியூப் (YouTube) பக்கத்தில், வாடிக்கையாளர் ஒருவர் தனது டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 30 kWh மற்றும் 40 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் முறையே 365 கிலோ மீட்டர்கள் மற்றும் 468 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அராய் அமைப்பால் சான்று வழங்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் (ARAI Driving Range) என்பது குறிப்பிடத்தக்கது.
65 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பேட்டரிகளை, வெறும் 26 நிமிடங்களில், 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற வாடிக்கையாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாஸ் (BAAS - Battery As A Service) முறையில் வாங்கினால், டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 2.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை (Tata Tiago EV Facelift) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது போன்று தொடர்ச்சியாக பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்து வரும் காரணத்தால், எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








