100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!

அதிக ரேஞ்ச் கொண்ட புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை நெக்ஸு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மிக தோதான விலையில் வந்துள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

நெக்ஸு நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் ரோட்லார்க் (Roadlark) என்ற பெயரில் வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள நெக்ஸு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து வாங்க முடியும்.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

நெக்ஸு ரோடுலார்க் எலெக்ட்ரிக் சைக்கிளின் மிக முக்கிய அம்சமாக இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் இரண்டு லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று இருக்கைக்கு கீழேயும் மற்றொரு பேட்டரி ஃப்ரேமிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முதன்மையான 8.7kWh பேட்டரியை கழற்றி மாட்ட முடியும். ஃப்ரேமில் பொருத்தப்பட்டுள்ள 5.2Ah பேட்டரியை கழற்ற முடியாது.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இரண்டு பேட்டரிகளையுமே சாதாரண வீட்டு எலெக்ட்ரிக் சாக்கெட் மூலமாக சார்ஜ் செய்ய முடியும். இந்த சைக்கிள் மின் மோட்டார் மற்றும் பெடல்களை மிதித்து ஓட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த சைக்கிளில் 250W திறன் கொண்ட பிரஷ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. 'Pedlec' என்று குறிப்பிடப்படும் மோடில் வைத்து இயக்கும்போது 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பையும், 'Throttle' மோடில் வைத்து இயக்கும்போது 75 கிமீ தூரம் செல்லும் வாய்ப்பையும் வழங்கும்.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 முதல் 4 மணிநேரம் பிடிக்கும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் த்ராட்டில் மோடில் வைத்து இயக்கும்போது மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லும்.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

நெக்ஸு ரோடுலார்க் எலெக்ட்ரிக் சைக்கிளில் கோல்டு ரோல்டு ஸ்டீல் சேஸி பொருத்தப்பட்டு இருக்கறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் அமைப்புடன் பின்சக்கரம் ஃப்ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் 26 அங்குல ஸ்போக்குகள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாபி காட்டன் ட்யூப் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் இருக்கை ஹை டென்சிட்டி ஃபோம் எனப்படும் விசேஷ மெத்தையுடன் கூடிய இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. மேலும், இந்த மின்சார சைக்கிளின் ரேஞ்ச், பேட்டரி சார்ஜ் உள்ளிட்டத் தகவல்களை பெறுவதற்காக ஹேண்டில்பாரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் பொருத்தப்பட்டுள்ளன.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

இந்த மின்சார சைக்கிளில் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும். கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!

புதிய நெக்ஸு ரோடுலார்க் எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு ரூ.42,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles

English summary
Nexzu Mobility has launched a new electric cycle called the Roadlark in the country. The Nexzu Roadlark features a price tag of Rs 42,000. Customers can purchase the e-cycle at Nexzu dealerships across India or through the brand's website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X