முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

ஓலா மின்சார ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் முதல் முறையாக கசிந்துள்ளது. படம் மற்றும் ஸ்கூட்டர்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இந்திய வாகன உலகின் தலைப்பு செய்தியாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா மிக விரைவில் அதன் முதல் மின்சார இருசக்கர வாகனத்தை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதற்கான பணிகளில் மிக தீவரமாக ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம், தற்போது மின்சார டூ-வீலருக்கான புக்கிங் பணிகளை நாட்டில் தொடங்கி வைத்துள்ளது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

ரூ. 499 என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவே ஓலா மின்சார ஸ்கூட்டர் இந்திய இருசக்கர வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாற காரணமாக அமைந்துள்ளது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது ஓலா மின்சார ஸ்கூட்டர்குறித்த ஸ்பை படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளன. ஓலா நிறுவனம் இரு விதமான தேர்வுகளில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என்ற பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் பெயருக்கான பதிவை செய்தது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையிலேயே 3 விதமான வண்ணம் கொண்ட மூன்று ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் சாலையில் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இதுபோன்று ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் கேமிராவின் கண்களில் சிக்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஸ்பை படங்கள் வாயிலாக ஓலா மின்சார ஸ்கூட்டர் மூன்று விதமான தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, டேப் போன்ற திரை ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இந்த திரையானது செல்போனை இணைக்க, பேட்டரியல் இருக்கும் சார்ஜை அறிந்து கொள்ள மற்றும் பயண வரலாறு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள இந்த திரை மிகுந்த உதவியாக இருக்கும். இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு வசதிகளுடன் ஓலா மின்சார ஸ்கூட்டர் அறிமுகமாக இருக்கின்றது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

சாவியில்லா இயக்கம், இரண்டு ஹெல்மெட்டுகளை வைத்துக் கொள்ளும் வகையிலான ஸ்டோரேஜ், கழட்டி மாட்டிக் கொள்ளும் வசதிக் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஓலா மின்சார ஸ்கூட்டர் பெற இருக்கின்றது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

ஓலா நிறுவனம் தனது மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வருவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 400 முக்கிய பகுதிகளில் லட்சத்திற்கும் அதிகமான ஹைபர்சார்ஜர் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இங்கு வைத்து ஓலா மின்சார ஸ்கூட்டரை 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் 75 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

ஆனால், வீட்டில் வைத்து சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரங்கள் தேவைப்படும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்தகைய திறன் வசதிகளுடனே ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருக்கின்றது.

முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ஓலா மின்சார ஸ்கூட்டரின் படம்! அசத்தலான ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு!

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ என ஓலா தெரிவித்திருக்கின்றது. இது பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. தற்போது ஃபேம்2 திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் அதிகரிக்கச் செய்யப்பட்டிருப்பதால் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஓலா மின்சார ஸ்கூட்டர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Ola Electric Scooter Pictures Leaked In Online. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X