24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவியும் வரவேற்பு!

24 மணி நேரத்தில் ஒரு லட்சம் முன் பதிவை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, அதன் முதல் மின்சார ஸ்கூட்டருக்கு அமோகமான புக்கிங் கிடைத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் மிக விரைவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை முன்னிட்டு நேற்றைய முன்தினம் இரவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன் பதிவை தொடங்கியது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

ரூ. 499 என்ற மிகக் குறைந்தபட்ச தொகையில் முன்பதிவு பணி தொடங்கியது. இது தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 1 லட்சம் பேர் வரை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்திருக்கின்றனர். இது நிறுவனமே எதிர்பார்த்திராத புக்கிங் வரவேற்பாகும்.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

இதனைக் கொண்டாடும் விதமாக நிறுவனம் தற்போது தங்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்புகுறித்த தகவலை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்திருக்கின்றது. 24 மணி நேரத்தில் 1 லட்சம் புக்கிங்குகள் கிடைத்திருப்பது ஒட்டுமொத்த இந்திய இருசக்கர வாகன சந்தைக்கு பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

சமீபத்தில் ஒன்றிய ஃபேம்2 திட்டத்தின்கீழ் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் கணிசமாக உயர்த்தியது. இதன் விளைவாக நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விலை அதிரடியாக குறைந்து வருகின்றது. ஆகையால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

இதுமட்டுமின்றி, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏராளமான சிறப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் இடம் பெற இருக்கின்றன. இவையனைத்தும் இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே 24 மணி நேரத்திற்கும் உள்ளாக 1 லட்சம் புக்கிங்குகளை ஓலா பெற்றிருக்கின்றது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

ஓலா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் வாயிலாக புக்கிங்கை ஏற்று வருகின்றது. ஒரே நேரத்தில் பலர் தளத்தில் குவிந்து வருவதால் சிலரால் புக்கிங் செய்ய முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. "இதற்கு தாங்கள் வருந்துவதாக தெரிவித்த நிறுவனம், இது நாங்கள் எதிர்பார்த்திராத அமோக வரவேற்பு. விரைவில் சிக்கல்கள் தீர்க்கப்படும்" என தெரிவித்திருந்தது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் ஓலா நிறுவனம் செரீஸ் எஸ், எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய பெயர்களுக்கான பதிவை செய்தது. இந்த தகவலின் அடிப்படையிலேயே மூன்று விதமான தேர்வுகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஓலா வெளியிடவில்லை. அதேசமயம், மிக விரைவில் பல சுவாரஷ்ய தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக சமீபத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்தன.

24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவு! ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் குவிந்த வரவேற்பு! இவ்ளோ குறைந்த முன்தொகைனா யார்தான் மிஸ் பண்ணுவா!

அந்த படங்களின் அடிப்படையில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மேட் கருப்பு, இளஞ்சிவப்பு மற்றும் கடல் நீலம் ஆகிய மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இத்துடன், பன்முக வசதிக் கொண்ட பெரிய திரை, கண்கள் போன்ற அமைப்புடைய முகப்பு மின் விளக்கு உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் மின்சார ஸ்கூட்டர் வர இருப்பது உறுதியாகியிருக்கின்றது.

Most Read Articles
English summary
Ola Electric Scooter Receives Over 1 Lakh Reservations With In 24 Hours. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X