பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இளம்பெண் ஒருவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணத்தையும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம்.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இணையத்தில் வைரலாகிய வீடியோவை சாட்சியாகக் கொண்டு இளம்பெண் ஒருவர்மீது சூரத் நகர போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சூரத் நகரத்தின் பர்டோலி எனும் பகுதிக்கு அருகில் உள்ள பபென் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை நண்பர்கள் செல்லமாக பின்சி பிரசாத் என அழைப்பதாகக் கூறப்படுகின்றது.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இவர் மீதே போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் அதீத ஆர்வம் கொண்ட பின்சி பிரசாத் அண்மையில் கேடிஎம் ஆர்சி மற்றும் கேடிஎம் ட்யூக் பைக்குகளைக் கொண்டு சாகச பயணம் செய்ததாகக் கூறப்படுகின்றது.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

புள்ளிங்கோக்கள் பாணியில் கைகளை விட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டுவது, சர்ட் காலரை தூக்கிவிடுவது என பல்வேறு சாகசங்களை பைக் அதிக வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தபோதே அவர் செய்திருக்கின்றார். இத்தகைய ஆபத்தான செயல்களின் காரணத்தினாலேயே போலீஸார் அவர்மீது அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

தனது சாகச பயணங்கள்குறித்த வீடியோக்களை வலைதளங்களில் உடனுக்குடன் பதிவிடும் வழக்கம் கொண்டவர் பின்சி பிரசாத். அந்தவகையில், சமீபத்திய பைக் ஸ்டண்ட் குறித்த வீடியோக்களை இன்ஸாடவில் அவர் பகிர்ந்திருக்கின்றார். இந்த வீடியோவே அவர் போலீசிடத்தில் சிக்க காரணமாக அமைந்துள்ளது.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இந்த பெண் க்யூட்டாக இருப்பதாலும், சில இளைஞர்கள் செய்வதற்கே தயங்கக் கூடிய சாகசங்களைக் கூட பின்சி பிரசாத் அசால்டாக செய்வார் என்கிற காரணத்தினாலும் அவருக்கு ஃபாலோவர்கள் அதிகம். இதுவே அவருக்கு வினையாக வந்து நின்றிருக்கின்றது. ஆமாங்க, இவரை பின்தொடர்பவர்கள் இவரின் சாகச வீடியோக்களையும் ட்ரெண்டாக்கியிருக்கின்றார்.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இதுவே போலீஸாரின் கண்களில் சிக்கியிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, பொது சாலையில் வைத்து ஸ்டண்ட் செய்தது, பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாதது மற்றும் விதிக்கப்பட்ட வேகத்தையும் கடந்து இருசக்கர இயக்கியது என பல்வேறு பிரிவுகளின்கீழ் இளம்பெண்மீது போலீஸார் வழக்கு பதிந்திருக்கின்றனர்.

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்... இனி யாரும் இப்படி செய்ய கூடாது... கடும் நடவடிக்கை எடுத்த போலீஸ்!

இதனால் பெரும் சிக்கலில் பின்சி பிரசாத் சிக்கியிருக்கின்றார். பொது சாலையில் ஸ்டண்ட் செய்வது மோட்டார்வாகன போக்குவரத்து விதிகளின் குற்றமாகும். இதுமட்டுமின்றி, பல்வேறு விதிமீறல்களில் அவர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இதுபோன்ற தவறை வேறு யாரும் செய்யக் கூடாது என்பதற்காக முன்னதாரணமாக பின்சி பிரசாத் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர்.

Image Courtesy: Connect Gujarat TV

சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவின் அடிப்படையில் இதுவரை பலரை போலீஸார் சிறை பிடித்திருக்கின்றனர். கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் பல அரங்கேறியிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று இளம்பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்த காரணத்திற்காக அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Surat Police Takes Action Against Young Girl; Here Is Why?.. Read In Tamil.
Story first published: Friday, March 12, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X