பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

பைக்கில் லாங் டிரிப் செல்வோர் மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

பைக்கில் லாங் டிரிப் அடிக்கும் ஆசை பலருக்கும் இருக்கிறது. நாட்டின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு நிறைய பேர் பைக்கில் பயணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறான பயணங்கள் இனிமையான அனுபவத்தை தர வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைப்பது அவசியம். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

முன்கூட்டியே தொடங்கி முன்கூட்டியே முடியுங்கள்: சூரியன் உதித்த உடனேயே பயணத்தை தொடங்குவதும், சூரியன் மறைந்தவுடன் பயணத்தை முடித்து கொள்வதும் நல்லது. உங்கள் பயணம் எத்தனை நாட்களை கொண்டதாக இருந்தாலும், தினமும் இந்த விதியை பின்பற்றுவது அவசியம். ஏனெனில் பைக்கை பொறுத்தவரை, இரவு நேர பயணங்கள் சிறந்தவை கிடையாது.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் நாள் முழுவதும் பைக் ஓட்டிய காரணத்தால், நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். இது விபத்துக்கான வாய்ப்பை அதிகரித்து விடும். மேலும் இரவு நேரத்தில் பைக் பழுதாகி விட்டால், உதவிக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம். ஏனெனில் அது உங்களுக்கு புதிய இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

எரிபொருள் நிரப்பி விடுங்கள்: ஒவ்வொரு நாள் பயணத்தை தொடங்கும் முன்பும் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பி விடுவது நல்லது. இடையில் எரிபொருள் இல்லாமல் பைக் நின்று விட்டால் சிக்கல். வழியில் நிரப்பி கொள்ளலாம் என நினைப்பது தவறு. இது உங்கள் நேரத்தை வீணடிக்கும். அத்துடன் ஒருவேளை பெட்ரோல் பங்க் இல்லாவிட்டாலோ, பழுதடைந்திருந்தாலோ சிக்கல்தான்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

சர்வீஸ்: பயணத்தை தொடங்கும் முன்பு பைக் முறையாக சர்வீஸ் செய்யப்பட்டுள்ளதா? நல்ல கண்டிஷனில் உள்ளதா? என்பதை பரிசோதித்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பயணத்தின்போது தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே நல்ல, நம்பிக்கையான மெக்கானிக்கை கொண்டு பைக்கை பரிசோதித்து பார்த்து கொள்வது சிறந்தது.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

ஹோட்டல்: நீங்கள் தங்க கூடிய ஹோட்டலில் இருந்து ரெஸ்டாரெண்ட்/பார் ஆகியவை நடந்து செல்ல கூடிய தொலைவில் இருக்குமாறு பார்த்து கொள்வது சிறந்தது. இதன் மூலம் தூங்க செல்லும் முன் நீங்கள் மீண்டும் பைக் ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் மது அருந்தி விட்டு பைக் ஓட்டுவதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

எங்கு சாப்பிடுவது: பல்வேறு ஊர்களில் மிகவும் பிரபலமாக உள்ள செயின் ரெஸ்டாரெண்ட்களை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் சென்றுள்ள ஊரில் மட்டும் இருக்க கூடிய ஹோட்டலில் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அந்த ஊரின் சுவையை நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியும். அத்துடன் அந்த பகுதியில் கலாச்சாரம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

லைட் பிரேக்ஃபாஸ்ட்: காலை உணவை இலகுவாக எடுத்து கொண்டால், நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம். ஏனெனில் நிறைய சாப்பிட்டால், செரிமானமாக அதிக ஆற்றல் தேவைப்படும். மேலும் தூக்கம் வருவதற்கும் இது காரணமாக அமைந்து விடும். எனவே காலை உணவை இலகுவாக சாப்பிடுங்கள். முடிந்தவரை மதியம், இரவு உணவுகளையும் முன்கூட்டியே சாப்பிட்டு விடுங்கள்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

உலர்ந்த பழங்கள்: இடம் இருக்கும்பட்சத்தில், உலர்ந்த பழங்களை கொண்டு செல்வது சிறந்தது. பேரிச்சை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவை உங்களுக்கு உடனடியாக எனர்ஜியை கொடுக்க கூடியவை. தொலை தூர பயணங்களின்போது சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதால், இவை மிகவும் முக்கியம். பசியுணர்வு ஏற்பட்டால் அவற்றை சாப்பிடலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

நிறைய குடிநீர்: பயணத்தின்போது குடிநீர் எடுத்து செல்வது மிக அவசியம். அவ்வப்போது குடிநீர் குடியுங்கள். உங்களுக்கு தாகமாக இல்லையென்றாலும், குடிநீரை பருகலாம். இல்லாவிட்டால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே தாகமாக இல்லையென்றாலும் கூட, குறிப்பிட்ட இடைவெளிகளில் பைக்கை நிறுத்தி குடிநீரை அருந்தலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

கையில் பணம்: இன்றுதான் பணம் செலுத்தும் முறைகள் என்னதால் டிஜிட்டல் மயமாகி விட்டாலும், சிறிய நகரங்களில் இன்னமும் கிரெடிட்/டெபிட் கார்டுகளை ஏற்று கொள்வதில்லை. கூகுள்பே போன்ற வசதிகள் இருப்பதும் கடினம்தான். எனவே தேவையான அளவு பணத்தை கையில் ரொக்கமாக வைத்து கொள்வது நல்லது. அதே சமயம் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

சார்ஜர்: தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும்போது செல்போனில் சார்ஜ் இருப்பது அவசியம். எனவே உங்கள் பைக்கில் சார்ஜர் வசதியை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பவர் பேங்க்கை உடன் கொண்டு செல்லலாம். ஹோட்டலுக்கு சென்றவுடன் அதனை மீண்டும் சார்ஜ் செய்து கொள்ளலாம். உங்களுடைய பைக்கில் சார்ஜர் இல்லாவிட்டால், இது சிறந்த மாற்று தேர்வாக இருக்கும்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

என்ஜாய் பண்ணுங்க பாஸ்: மிகவும் அழகான இடங்களை பார்த்தால், பைக்கை நிறுத்தி அவற்றை ரசியுங்கள். இல்லாவிட்டால் பார்க்காமல் தவற விட்டு விட்டோமே என்ற உணர்வு பின் நாட்களில் ஏற்படும். அதேபோல் நீங்கள் பைக்கை நிறுத்தும் இடங்களில் எல்லாம் ஒரு செல்பி எடுத்து கொள்ளலாம். நீங்கள் குழுவாக சென்றால், ஒவ்வொரு நாள் பயணம் தொடங்கும் முன்பும் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.

பைக்கில் லாங் டிரிப் செல்லும்போது செயின் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா?

பாதுகாப்பு உபகரணங்கள்: பைக் பயணத்தின்போது ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் முறையாக அணிந்திருப்பது அவசியம். எதிர்பாராதவிதமாக நீங்கள் சாலை விபத்தில் சிக்கினால், அவை உங்கள் உயிரை காப்பாற்றும். எனவே பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். இந்த டிப்ஸ்கள் உங்கள் பயணத்தை இனிமையாக்கும்.

Most Read Articles

English summary
Useful Tips For Long Distance Bike Ride. Read in Tamil
Story first published: Thursday, June 17, 2021, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X