நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள எலெக்ட்ரிக் பைக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதில், நமக்கு எவ்வித சந்தேகமும் தேவையில்லை. தற்போதைய நிலையில் அனைத்து முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஒன்று எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து விட்டன. அல்லது விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றன.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

ஆனால் உண்மையை சொல்வதென்றால் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்தான் எலெக்ட்ரிக் டூவீலர் துறையில் சிறந்து விளங்குகின்றன. இதில், யாத்ரி மோட்டார்சைக்கிள் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனமும் ஒன்று. நேபாளத்தை சேர்ந்த இந்த நிறுவனம் அழகான தோற்றம் கொண்ட புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு ப்ராஜெக்ட் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எடை சுமாராக 180 கிலோ. பேட்டரி தொகுப்பின் எடையை கணக்கிடும்போது, பைக்கின் மொத்த எடையை அவ்வளவு அதிகம் என கூற முடியாது.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

யாத்ரி ப்ராஜெட்க் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில், 8kWh லித்தியம்-நிக்கல்-மாங்கனீசு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 48kW மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை யாத்ரி ப்ராஜெட்க் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெறும் 2.5 வினாடிகளுக்கு உள்ளாகவே எட்டி விடும்.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 230 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு இது மிக சிறப்பான ரேஞ்ச் என்பதில் சந்தேகமில்லை. சார்ஜ் தீர்ந்து விடுமோ? என்ற கவலையின்றி வாடிக்கையாளர்கள் சௌகரியமாக பயணம் செய்யலாம்.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. 19.45 லட்சம் நேபாள ரூபாய் மதிப்பில் யாத்ரி ப்ராஜெக்ட் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் பார்த்தால் இது சுமார் 12.85 லட்ச ரூபாய் ஆகும்.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

பிரீமியம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என்பதால், விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகவும் கூட யாத்ரி ப்ராஜெக்ட் ஜீரோவை குறிப்பிடலாம். ஆனால் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஏற்றுமதி செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்த தகவல்கள் எதையும் யாத்ரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிடவில்லை.

நேபாளத்தை சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய எலெக்ட்ரிக் பைக்... விலை தெரிந்தால் அப்படியே ஸ்டண் ஆயிருவீங்க!

எனவே இந்திய சந்தையில் யாத்ரி ப்ராஜெக்ட் ஜீரோ எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தற்போதைக்கு விற்பனைக்கு எதிர்பார்க்க முடியாது. ஒருவேளை இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தாலும் கூட, விலை மிகவும் அதிகம் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான்.

Most Read Articles
English summary
Yatri Project Zero Electric Motorcycle: Important Details. Read in Tamil
Story first published: Friday, April 30, 2021, 23:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X