ரூ.3.67 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட ஏ-ஸ்டார்: மாருதி அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஏ-ஸ்டார் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் புதிய ஏ-ஸ்டாரில் பல புதிய மாற்றங்களை செய்துள்ளது மாருதி. குறிப்பாக, நெருக்கடியாக இருந்த பின்புற இருக்கையை அதிக இடவசதி கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை கண்களை கவரும் வகையில் புதுமையை புகுத்தியுள்ளது மாருதி. மேலும், புதிய கலர்களிலும், இசட்எக்ஸ்ஐ என்ற புதிய டாப் வேரியண்ட்டையும் மாருதி அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே, அறிமுகம் செய்யப்பட்ட ஆட்டோமேட்டிக் ஏ-ஸ்டார் கார் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு ஏ-ஸ்டார் கார்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது என்று மாருதி தெரிவித்துள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஏ-ஸ்டார் காரைவிட புதிய ஏ-ஸ்டார் ரூ.1,000 மட்டும் விலை கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்டு அப் ஏ-ஸ்டார் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் இந்த புதிய ஏ-ஸ்டார் ரூ.3.67 லட்சம் முதல் ரூ.4.47 லட்சம் விலையில் விற்பனைக்கு வருவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்பட மொத்தம் 130 நாடுகளுக்கு ஏ-ஸ்டார் காரை மாருதி ஏற்றுமதி செய்கிறது.

மொத்தம் இதுவரை 2.81 லட்சம் ஏ-ஸ்டார் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் 1 லட்சம் ஏ-ஸ்டார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
The country's largest car maker Maruti Suzuki has introduced new Spiced up A-star priced at Rs.3.67 lakhs. The new A-star comes up with new colours and ZXi top variant. The company already introduced the automatic A-star in the market.
Story first published: Friday, January 27, 2012, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X