பைக் தயாரிப்பில் இறங்கிய கேட்டர்ஹாம்: 3 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது

By Saravana

வித்தியாசமான ஸ்போர்ட்ஸ் கார்கள் மூலம் உலக புகழ்பெற்ற இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் கேட்டர்ஹாம் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இத்தாலியில் நடந்து வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் 3 புதிய மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கேட்டர்ஹாம் கார்களை போலவே இந்த மோட்டார்சைக்கிள்களின் டிசைன் மிக வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. தவிர, பார்முலா 1 அணியை நடத்துவது போன்று தற்போது புதிய மோட்டார்சைக்கிள் பந்தய அணியை துவங்கவும், அடுத்த ஆண்டு மோட்டோ2 மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளது. மிலன் நகர் கண்காட்சியில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த சூப்பரான 3 மோட்டார்சைக்கிள்களின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ப்ரூட்டஸ் 750

ப்ரூட்டஸ் 750

கடந்த ஆண்டு இதே இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கான்செப்ட் நிலையிலிருந்த இந்த பைக் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக முன்னேறியுள்ளது. லேம்பரெட்டா நிறுவனத்திலிருந்து தற்போது கேட்டர்ஹாம் தலைமை டிசைனராக பொறுப்பேற்றிருக்கும் அலிசான்ட்ரோ டார்தாரிணி இந்த பைக்கை வடிவமைத்துள்ளார்.

மான்ஸ்ட்டர் ஸ்டைல்

மான்ஸ்ட்டர் ஸ்டைல்

யுட்டிலிட்டி ரகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ப்ரூட்டஸ் 750 மோட்டார்சைக்கிள் பார்ப்பதற்கு மான்ஸ்ட்டர் டிரக்குகளை போன்ற பெரிய டயர்களை கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 49 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக்கில் ரிவர்ஸ் எடுக்கும் வசதி கொண்டது.

பெரிய டயர்கள்

பெரிய டயர்கள்

புரூட்டஸ் 750 பைக்கில் 14 இஞ்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது அனைத்து சாலை நிலைகளுக்கும், அனைத்து தட்ப வெப்ப நிலைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

ஏடிவி வாகனம்

ஏடிவி வாகனம்

பனி படர்ந்த சாலைகளில் இதன் முன்புற சக்கரத்தில் ஸ்கேட்டிங் பலகையையும், பின்புறத்தில் பற்சக்கரத்தையும் மாட்டி செல்ல முடியும் என கேட்டர்ஹாம் தெரிவித்துள்ளது. எனவே, இதனை ஆல் டெர்ரெய்ன் மோட்டார்சைக்கிளாகவும் கூறலாம்.

கிளாசிக் இ-பைக்

கிளாசிக் இ-பைக்

இரண்டாவதாக கேட்டர்ஹாம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் மாடல் ஓர் எலக்ட்ரிக் பைக். ரெட்ரோ ஸ்டைல் எனப்படும் பழமை கலந்த டிசைன் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பைக்கிற்கு கிளாசிக் இ-பைக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மோட்டார்

மோட்டார்

இதன் வி ட்வின் மோட்டார் பேட்டரி அறையுடன் சேர்த்து மிக சிறப்பாகவும், கச்சிதமாகவும் பொருத்தப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 40 கிமீ முதல் 80 கிமீ வரை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கார்பன் இ-பைக்

கார்பன் இ-பைக்

மூன்றவதாக லிமிடேட் எடிசன் எலக்ட்ரிக் பைக் மாடல் ஒன்றையும் கேட்டர்ஹாம் அறிமுகம் செய்துள்ளது. ஃபார்முலா 1 கார்களின் டிசைன் தாத்பரியங்களை மைய கருவாக எடுத்துக் கொண்டு இந்த கார்பன் இ பைக் கான்செப்ட்டை டிசைன் செய்துள்ளதாக கேட்டர்ஹாம் கூறியுள்ளது.

 விற்பனை

விற்பனை

இந்த 3 மோட்டார்சைக்கிள் மாடல்களும் அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கப்பட உள்ளன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய மார்க்கெட்டுகளில் இந்த பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கேட்டர்ஹாம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Caterham, the British automaker well known for its Seven sports cars and the Caterham F1 team has a booth at the EICMA show in Milan. The reason behind the carmaker's presence at the motorcycle show is to tell the world about the start of Caterham Motorcycles and the Caterham Moto Racing team.
Story first published: Wednesday, November 6, 2013, 13:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X