ஃப்ரேம்லெஸ் கட்டமைப்புடன் புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக்குகள் அறிமுகம்!

By Saravana

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் கண்காட்சியான இதில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது படைப்புகளை பார்வைக்கும், விற்பனைக்கும் அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த ஆட்டோ ஷோவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டுகாட்டியின் மான்ஸ்ட்டர் 1200 மற்றும் மான்ஸ்ட்டர் 1200எஸ் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. டுகாட்டியின் முத்தாய்ப்பான இந்த மாடல் தற்போது கூடுதல் பொலிவுடன் வந்துள்ளது. பனிகேல் 1199 நேக்டு மாடலை ஒத்திருந்தாலும் தனது தனித்துவத்தை இழக்காமல் பொலிவு பெற்றுள்ளன மான்ஸ்ட்டர் பைக்குகள். இந்த பைக்குகளின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்கள்

மாடல்கள்

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் மான்ஸ்ட்டர் 1200 என்ற பேஸ் மாடலிலும், மான்ஸ்ட்டர் 1200 எஸ் என்ற டாப் என்ட் மாடலிலும் கிடைக்கும். (குறிப்பு: படங்களில் கருப்பு நிற புகைப்போக்கி குழாய் கொண்ட பைக்தான் மான்ஸ்ட்டர் எஸ் பைக் என்பதை கண்டறிந்து கொள்ளலாம்)

 எஞ்சின்

எஞ்சின்

டுகாட்டி மான்ஸ்ட்டரில் முதன்முறையாக 1198சிசி திறன் கொண்ட புதிய வி ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

பவர்

பவர்

டுகாட்டி மான்ஸ்ட்டர் 1200 பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 135 பிஎச்பி ஆற்றலையும், மான்ஸ்ட்டர் 1200 எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின் 145 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்திலும் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்திலும், பின்புறத்திலும் முந்தைய மாடலில் இருந்த சஸ்பென்ஷனுக்கு பதிலாக ஓலின்ஸ் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 வீல்கள்

வீல்கள்

பனிகேல் 1199 பைக்கின் வீல்களில் இருக்கும் அதே டிசைன் கொண்ட சக்கரங்கள்தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரே ப்ரேம் இல்லை

ஒரே ப்ரேம் இல்லை

பனிகேல் 1199 பைக்கை போன்றே புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கும் ஃப்ரேம்லெஸ், அதாவது ஒரே ஃப்ரேம் கொண்டதாக இல்லாத பைக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

கட்டமைப்பு

டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் முன்புற துணை ஃப்ரேம், பின்புற துணை ப்ரேம் மற்றும் எஞ்சின் என தனித்தனியாக பிரிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு

இணைப்பு

பைக்கின் முன்புற துணை ஃப்ரேம் எஞ்சின் ஹெட் மீது இணைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, ஸ்விங் ஆர்ம் நேரடியாக எஞ்சின் மீது இணைக்கப்பட்டுள்ளது.

பிரச்னை

பிரச்னை

பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் செயின் ஸ்பிராக்கெட்டால் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து பனிகேல் ஸ்டைலில் இதன் செயின் ஸ்பிராக்கெட் மாற்றப்பட்டுள்ளது.

கூடுதல் நீளம்

கூடுதல் நீளம்

தற்போதைய மாடலைவிட புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்குகள் 2.3 இஞ்ச் கூடுதல் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பைக்கின் நிலைத்தன்மை கூடுவதோடு, பின்புற பயணிக்கு அதிக இடவசதி கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஹேண்டில்பார்

ஹேண்டில்பார்

புதிய மான்ஸ்ட்டர் பைக்குகளின் ஹேண்டில்பார் 1.5 இஞ்ச் கூடுதல் உயரம் கொண்டதாகவும், ஓட்டுபவருக்கு கொஞ்சம் நெருக்கத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் டுகாட்டி தெரிவித்துள்ளது. இதன்மூலம், பைக்கின் கையாளுமை, சொகுசு மிகச்சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இருக்கைகளை ஓட்டுபவரின் வசதிகேற்ப மிக எளிதாக 29.3 இஞ்ச் முதல் 31.8 இஞ்ச் வரை கூட்டிக் குறைத்து கொள்ள முடியும். இது ஓட்டுபவருக்கு கூடுதல் வசதியை தரும்.

 இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

பனிகேல் பைக் போன்றே இந்த பைக்கிலும் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல், பல நிலைகளில் செயல்படும் ஏபிஎஸ் ஆகியவை எலக்ட்ரானிக் உதவியுடன் செயல்படும் என்பது கூடுதல் சிறப்பு.

டிசைன்

டிசைன்

மான்ஸ்ட்டர் பைக்கின் மிக எடுப்பான மற்றும் மிக கவர்ச்சியான அம்சம் பெட்ரோல் டேங்க்தான். முந்தைய மாடலைவிட இன்னும் கம்பீரமாக புதிய மாடலில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த டேங்க் 17 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

2014 டுகாட்டி மான்ஸ்ட்டர் 1200 பைக் சிவப்பு வண்ணத்திலும், டுகாட்டி மான்ஸ்ட்டர் 1200 எஸ் பைக் சிவப்பு மற்றும் சிவப்பு மற்றும் வெள்ளை, பித்தளை வண்ண கலவையிலும் கிடைக்கும்.

 விலை

விலை

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் 1200 பைக் 13,495 டாலர் விலையிலும், டுகாட்டி மான்ஸ்ட்டர் 1200 எஸ் பைக் 15,995 டாலர் விலையிலும் கிடைக்கும். புதிய டுகாட்டி மான்ஸ்டர் பைக் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
The 2014 Ducati Monster 1200 & Monster 1200 S have broken cover at the EICMA. With the launch of new Monster Ducati seems to have successful managed to reinvent the iconic Monster for the modern age, while still maintaining the sole of monster which is its instantly recognizable design.
Story first published: Wednesday, November 6, 2013, 11:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X