ஹைட்ரஜனில் இயங்கும் புதிய ஹோண்டா கான்செப்ட் கார்!!

By Saravana

ஆமாங்க. இந்த காருக்கு பெட்ரோல், டீசலெல்லாம் வேண்டாம். இது ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் ஹோண்டா வடிவமைத்திருக்கும் புதிய கான்செப்ட் கார்தாங்க இது. ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை தயாரிப்பதில் ஹோண்டா முன்னோடி நிறுவனம் என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1999ம் ஆண்டு முதல் ஹைட்ரஜன் கார்களை ஹோண்டா தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், டிசைன், தொழில்நுட்பத்தில் பல படிகள் முன்னேறிய அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் காரின் கான்செப்ட் மாடலை தற்போது டோக்கியோ மோட்டார் ஷோவில்  பார்வைக்கு வைத்துள்ளது ஹோண்டா. ஹோண்டா எஃப்சிஇவி என்ற பெயரிலான இந்த கான்செப்ட் கார் ஹோண்டாவின் முந்தைய எஃப்சிஎக்ஸ் கிளாரிட்டி காருக்கு மாற்றாக வர இருக்கிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

2015ம் ஆண்டில் இந்த கார் தயாரிப்புக்கு செல்ல இருக்கிறது. முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் இந்த கார் அடுத்ததாக ஜப்பானிலும் தொடர்ந்து ஐரோப்பாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த கார் முழு அளவில் உற்பத்தி செய்யப்படுமா அல்லது தற்போதைய எஃப்சிஎக்ஸ் கிளாரிட்டி கார் போன்று குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 டிசைன்

டிசைன்

ஃப்யூல் செல் எனப்படும் ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் இந்த காரின் எஞ்சின் பகுதிக்குள்ளேயே வெகு அழகாக அடக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைன் தாத்பரியமாக இதனை குறிப்பிடலாம்.

 இடவசதி

இடவசதி

எஞ்சின், எரிபொருள் கலன்கள் முழுவதுமாக எஞ்சின் பகுதிக்குள் அடக்கப்பட்டிருப்பதால், மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றிருக்கிறது. மேலும், 5 பேர் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது.

திறன்

திறன்

எஃப்சிஎக்ஸ் கிளாரிடிட்டி காருடன் ஒப்பிடுகையில், இதன் ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவு 60 சதவீதம் அதிகம். இதேபோன்று, எரிபொருள் கலன்களின் வடிவமும் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இந்த புதிய தலைமுறை ஹோண்டா எஃப்சிஇவி மூலம் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 500 கிமீ வரை செல்ல முடியும் என்கிறது ஹோண்டா. இந்த காரின் ஹைட்ரஜன் எரிபொருள் தொட்டியில் மூன்றே நிமிடங்களில் எரிபொருள் நிரப்ப முடியும் என்கிறது ஹோண்டா.

எதிர்கால மாடல்

எதிர்கால மாடல்

புதிய ஹோண்டா எஃப்சிஇவி ஹைட்ரஜன் கார் எதிர்காலத்துக்கான அடிப்படை தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல் என்று ஹோண்டா பெருமிதம் தெரிவித்துள்ளது. இது கான்செப்ட் நிலையில் இருந்தாலும், விரைவில் தயாரிப்பு நிலையை எட்ட இருப்பதும் முக்கிய விஷயமாக ஆட்டோமொபைல் துறையினரால் பார்க்கப்படுகிறது.

 இரட்டை பயன்

இரட்டை பயன்

ஹைட்ரஜன் கார்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக் கார்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் இந்த புதிய கார் கொண்டிருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

English summary
Honda FCEV, short for Fuel Cell Electric Vehicle, concept showcased at the Tokyo Motor Show looks just too sleek and modern, like only a concept version can look, to enter production despite what Honda says. But that's just the design we are talking about. Underneath it the car has a lot more to give to the world.
Story first published: Monday, November 25, 2013, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X