பிளேடுகிளைடர்... நிசான் டிசைன் வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டு

By Saravana

பிளேடு கிளைடர்... இது நிசான் நிறுவனத்தின் புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் கார். வரும் 20ந் தேதி துவங்க இருக்கும் டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தயாரிப்பு நிலையை எட்ட இருக்கும் இந்த ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் கார் நிசானின் எஞ்சினியரிங் வல்லமையை உலகுக்கு எடுத்துரைக்கும் வல்லமையை கொண்டிருக்கும்.

சிறப்பான ஏரோடைனமிக் டிசைன், இலகு எடை கொண்டதாகவும், அதிசக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராகவும் இருக்கும். அடுத்த தலைமுறை டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வரும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுதல் தரத்தில் புதிய அனுபவத்தை தரும் வகையில் இருக்கும்.

 டிசைன்

டிசைன்

குறுகலான முகப்பு, விரிந்து செல்லும் பின்புறம் ஆகியவை டெல்டாவிங் மற்றும் சியோடு ஆர்சி புரோட்டோடைப் எலக்ட்ரிக் ரேஸ் கார்களிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளது நிசான்.

ஏரோடைனமிக்

ஏரோடைனமிக்

1 மீட்டர் நீளமுடைய முகப்பு இலகு எடை கொண்டதாகவும், அதிவேகத்தில் செல்லும்போது, காரை திரும்பும்போது சிறந்த நிலைத்தன்மையை வழங்கும் விதத்திலும் செயல்படும் என்று நிசான் தெரிவித்துள்ளது.

உருவ விகிதாச்சாரம்

உருவ விகிதாச்சாரம்

30க்கு 70 என்ற விகிதத்தில் காரின் முன்புற, பின்புற அகலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிளேடுகிளைடரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று நிசான் தெரிவிக்கிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த காரில் 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டிரைவர் இருக்கையும், பின்புறத்தில் 2 பயணிகள் அமரும் வகையிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மெக்லாரன் எஃப்- 1 கார் அடிப்படையிலான இருக்கை அமைப்பு இது.

 உறுதியான பாடி

உறுதியான பாடி

பிளேடுகிளைடர் கான்செப்ட் காரில் உறுதியான கார்பன் ஃபைபர் பாடி பொருத்தப்பட்டுள்ளது. இதன் கீழ்பாகம் இலகு எடை கொண்ட கார்பன் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான ஸ்பாய்லர் இல்லாத மாடலாக இதனை டிசைன் செய்து சபாஷ் பெறுகிறது நிசான்.

மோட்டார்

மோட்டார்

இந்த காரின் 4 சக்கரங்களிலும் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மோட்டாரும் வெவ்வேறு வேகத்தில் சுழலும் அம்சத்தை கொண்டிருப்பதால் சிறப்பான நிலைத்தன்மை மற்றும் எளிதாக கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 சிறந்த டிரைவிங்

சிறந்த டிரைவிங்

ரேஸ் கார்களில் இருக்கும் அம்சங்களை சாலையில் செல்லத்தக்க அம்சங்கள் கொண்ட கார்களில் புகுத்தி வருவதால், ஓட்டுபவருக்கு புதிய அனுபவத்தை இதுபோன்ற கார்கள் வழங்கும் என நிசான் மோட்டார்ஸ்போர்ட்ஸ் இன்னோவேஷன் பிரிவுய இயக்குனரும், இந்த கார் தயாரிப்பு திட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவருமான பென் பவுல்பி கூறியிருக்கிறார்.

வீடியோ

பிளேடுகிளைடர் காரின் 360 டிகிரி கோணத்தில் காண்பதற்கான வீடியோ இணைப்பு.

Most Read Articles
English summary
BladeGlider. That's a name straight from a sci-fi movie, but the car on the other hand, is not. The BladeGlider is a concept car which Nissan will display at the Tokyo Auto Show which starts on November 20. What's even better is that Nissan will actually build production version BladeGliders in a couple of years.
Story first published: Monday, November 11, 2013, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X