வைரத்தால் இழைக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் பான்டம்: துபாயில் தரிசனம்

By Saravana

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் கார் துபாய் வாகன கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் நடந்த பிராங்க்ஃபர்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் செலஸ்டியல் எடிசன் பான்டம் காரை ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம் செய்தது.

இந்த காரில் கூடுதலாக வைரக்கற்களை பதித்து தற்போது பார்வைக்கு வைத்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ். இதனால், முன்பைவிட அந்த காரின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அசத்தலான இந்த ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

நட்சத்திர அமைப்பு

நட்சத்திர அமைப்பு

பிஎம்டபிள்யூ தலைமையின் கீழ் வந்த தினத்தன்று வானில் இருந்த நட்சத்திர அமைப்பை அப்படி பிரதிபலிக்கும் வகையில், இந்த செலஸ்டியல் எடிசன் பான்டம் காரின் உட்புற கூரையில் சின்னச் சின்ன விளக்குகள் பதிக்கப்பட்டுள்ளன.

வைரக்கற்கள்

வைரக்கற்கள்

டோர் கேப்பிங்ஸ், சென்ட்ரல் கன்சோல் லிட், பின்புற பயணிகள் பகுதிக்கான தடுப்பு ஆகியவற்றில் 446 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கைகளாலேயே பதிக்கப்பட்டன.

 வெளிப்புறம்

வெளிப்புறம்

உட்புறத்தை போன்றே வெளிப்புறத்திலும் இரவு நேரத்தை குறிக்கும் வகையிலான வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

 இதர கார்கள்

இதர கார்கள்

பான்டம் கூபே சிகேன், கோஸ்ட் அல்பைன் டிரையல் சென்டினரி எடிசன் மற்றும் ரயீத் ஆகிய கார்களும் துபாய் வாகனக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
At the ongoing 2013 Dubai Motor Show the British automaker has displayed the Celestial Phantom yet again, but its even more precious this time - literally.
Story first published: Friday, November 8, 2013, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X