லிட்டர் டீசலுக்கு 90 கிமீ மைலேஜ்: அடுத்து வந்த புதிய ஃபோக்ஸ்வேகன் கார்!

லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் தரும் ஃபோக்ஸ்வேகன் எக்ஸ்எல்1 காருக்கு உற்பத்தி இலக்கைத் தாண்டி முன்பதிவு கிடைத்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், இதே தொழில்நுட்பத்தில் தற்போது அப் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடலை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கார் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசல் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ட்வின் அப்

ட்வின் அப்

ட்வின் அப் என்ற பெயரில் இந்த கான்செப்ட் கார் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இது 4 கதவுகள் கொண்ட கார் மாடலாக இருக்கிறது. அப் அடிப்படையிலான இந்த காரில் சில மாறுதல்களுடன் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதன் எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு மட்டும் எக்ஸ்எல்1 காரிலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹைபிரிட் கார்

ஹைபிரிட் கார்

இது எக்ஸ்எல்1 கார் போன்றே டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் மாடல் என்பதும் அதிக ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 803 சிசி டீசல் எஞ்சினும், 27 kW திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

மைலேஜ்

மைலேஜ்

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் லிட்டருக்கு 90.91 கிமீ மைலேஜ் தருவதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது.

எரிபொருள்

எரிபொருள்

இந்த காரில் 33 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் இருக்கிறது. தவிர, 8.6 kWh லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டும் பின்புற இருக்கைக்கும், பூட் ரூமுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

 பிரத்யேக அமைப்பு

பிரத்யேக அமைப்பு

இதன் பிரத்யேக அமைப்பு கொண்ட கிளட்ச் மூலம், டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை தனித்தனியாக இயக்க உதவுகிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 123 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

 பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும்போது 0- 96 கிமீ வேகத்தை 8.8 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. அதே டீசல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்த ஹைபிரிட் நுட்பத்தில் இயங்கும்போது 0 -100 கிமீ வேகத்தை 15.7 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். ஆனால், மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்லும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகள் மூலம் அதிகபட்சமாக 51 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.

 ஆற்றல் சேமிப்பு

ஆற்றல் சேமிப்பு

பிரேக் பிடிக்கும்போது இதன் எலக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் போன்று செயல்படும். அப்போது, பிரேக் ஆற்றல் பேட்டரியில் மின் ஆற்றலாக மாற்றி சேமிக்கப்படும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

டிஜிட்டல் மயம்

டிஜிட்டல் மயம்

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுவதுமாக டிஜிட்டல் மீட்டர்களை கொண்டிருக்கிறது. டீசல் அல்லது எலக்ட்ரிக் மோட்டாரில் மாற்றும்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிள்ஸ்ட்டரில் இருக்கும் பின்னணி விளக்குகளின் நிறமும் மாறிவிடும். ஸ்மார்ட்போன்களில் உள்ளது போன்ற அமோலெட் திரை இதில் பயன்படுத்தப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

Most Read Articles

English summary
German car maker Volkswagen has unveiled a hybrid model Up city car at the Tokyo Motor Show.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X