பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

By Ravichandran

பெனெல்லி டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யட்டுள்ளது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ என்பது இரு சக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக நடத்தபடும், உலக அளவிலான மோட்டார் ஷோ ஆகும்.

2013-ஆம் ஆண்டில், பெனெல்லி டொர்னேடோ 1130 வெளியானது முதல், இந்த பெனெல்லி டொர்னேடோ 302 தான் முதலும், முழுவதுமாகவும் ஃபேரிங் செய்யபட்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பெனெல்லி டொர்னேடோ 302 முழுமையாக புதிய ட்ரெல்லிஸ் ஃபிரேம் கொண்டுள்ளதால், இதன் இடை பெரும் அளவில் குறைக்கபட்டுள்ளது.

டிஎன்டி 300 மோட்டார்சைக்கிளில் உள்ளது போன்றே, இந்த டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிளிலும், அதே 300 சிசி இன் - லைன், 2 - சிலிண்டர்கள் கொண்ட இஞ்ஜின் உள்ளது.

இந்த டொர்னேடோ 302 இஞ்ஜின் 35 பிஹெச்பி-யையும், அதிகப்படியாக 12,000 ஆர்பிஎம்கள் வரை சுழலும் திறன் கொண்டுள்ளது. ஆனால், டிஎண்டி 300 மோட்டார்சைக்கிள் 11,500 ஆர்பிஎம்கள் வரை மட்டுமே சுழலும் திறன் கொண்டுள்ளது.

Benelli Tornado 302 was unveiled at the EICMA Motorcycle Show 2015 in Milano

டொர்னேடோ 302 இஞ்ஜின், 6-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மேலும், டிஎன்டி 300 மோட்டார்சைக்கிளை காட்டிலும், டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிள் 16 கிலோ எடை குறைவாக உள்ளது. இதன் எடை 196 கிலோ மட்டுமே ஆகும்.

டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிளின் பல்வேறு அம்சங்களில், மிக முக்கியமான அம்சம், அதன் ட்ரெல்லிஸ் ஃபிரேம் தான் என்று கூறலாம்.

இஞ்ஜினும், இந்த ஃபிரேமின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த டிசைன் மூலம், டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிளின் எடை வெகுவாக குறைந்து, 50 : 50 என்ற விகிதாச்சாரத்தில் எடை பகிர்வுக்கு உதவியுள்ளது.

டொர்னேடோ 302 மோட்டார்சைக்கிளின் முன்னிலும், ரியரிலும், தேர்வு முறை ஏபிஎஸ் வசதியுடன் கூடிய டிஸ்க் பிரேக்கள் உள்ளது. முன் சக்கரம், 110 செக்‌ஷன் டையரையும், பின் சக்கரம் 150 செக்‌ஷன் டையரையும் கொண்டுள்ளது. இரண்டு சக்கரங்களும் 17 இஞ்ச் அளவிலானதாக உள்ளது.

இந்த புதிய பைக் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிபடுத்தபடலாம் என தெரிகிறது. எனவே, இந்த மோட்டார்சைக்கிள் மீது அதிக ஆவல் காணப்படுகிறது.

Most Read Articles
English summary
Benelli Tornado 302 was unveiled at the EICMA Motorcycle Show 2015 held in Milano. Benelli Tornado 302 is the first fully faired motorcycle from the Italian manufacturer, ever since the Benelli Tornado 1130, which was introduced in 2013.
Story first published: Friday, November 20, 2015, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X