இரு சக்கர வாகனங்களுக்கான சைடு வியூ அசிஸ்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் பாஷ்!

Written By:

இரு சக்கர வாகனங்களுக்கான, உலகின் முதல் சைடு வியூ அசிஸ்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தை பாஷ் நிறுவனம் அறிமுகம் செய்கின்றனர். இந்த தொழில்நுட்பம், ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபடுகிறது.

பாஷ் நிறுவனமானது ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் போக்குவரத்து தொடர்பான தீர்வுகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

எலக்ட்ரானிக் அசிஸ்டண்ட்ஸ் தொழில்நுட்பம் ;

எலக்ட்ரானிக் அசிஸ்டண்ட்ஸ் தொழில்நுட்பம் ;

எலக்ட்ரானிக் அசிஸ்டண்ட்ஸ் தொழில்நுட்பம் மிக பிரபலமாகி வருகின்றது. இவை கார்களில் மட்டும் உபயோகம் செய்யபட்ட காலம் சென்றுவிட்டது.

இப்போது, இரு சக்கர வாகனங்களுக்கும் இத்தகைய தொழில்நுட்பம் இப்போது விரிவடைந்து வருகிறது.

சைடு வியூ அசிஸ்ட்;

சைடு வியூ அசிஸ்ட்;

பாஷ் நிறுவனம் இரு சக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமான சைடு வியூ அசிஸ்ட் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. இது தான் மோட்டார்சைக்கிள்களுக்காக அறிமுகம் செய்யப்படும், இத்தகைய முதல் தொழில்நுட்பம் ஆகும்.

சைட் வியூ அசிஸ்ட், நான்கு அல்ட்ராஸோனிக் சென்சார்களை கொண்டுள்ள்து. இந்த சென்ஸார்கள், சுற்றுமுற்றும் ஆராய்ந்து, வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலைகளையும், தெருக்களையும், கடக்க உதவுகிறது.

இந்த சென்ஸார்கள், 5 மீட்டர்கள் வரையிலான தூரத்தை கண்காணிக்கிறது. நமது வழக்கமான இரண்டு கண்ணாடிகளில் காண முடியாத இடங்களை கண்காணிக்க உதவுகிறது.

பிளைண்ட் ஸ்பாட் என்னும் வாகன ஓட்டிகள் காண முடியாத இடங்களில் வேறு வாகனங்கள் இருந்தால், இந்த தொழில் நுட்பம் மூலம் பைக் இயக்குபவருக்கு, கண்ணாடிகள் அருகில் ஆப்டிகல் சிக்னல் மூலம் சமிஞ்சைகள் கொடுக்கபடுகிறது. இதனால், சாலைகள் அல்லது சந்துகளில் பாதை மாறும் போது விபத்துகள் தடுக்கபடுகிறது.

மோட்டார்சைக்கிள் இயக்கும் இன்பதை குறைத்து கொள்ளாமல், இரு சக்கரங்கள் இயக்குவதை பாதுகாப்பாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என பாஷ் தலைமை அதிகாரி டாக்டர் ட்ரிக் ஹோஹோசெல் கூறினார்.

பாஷ் சைட் வியூ அசிஸ்ட் இயங்கும் முறை;

பாஷ் சைட் வியூ அசிஸ்ட் இயங்கும் முறை;

சைடு வியூ அசிஸ்ட் சாலைகள் அல்லது தடம் மாறும் போது, மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

பாஷ் சைடு வியூ அசிஸ்ட், பைக்கின் முன்பகுதியிலும், ரியர் (பின்) பகுதிகளிலும் பொருத்தப்படுகிறது. ரியர் சென்சார்கள் வலது மற்றும் இடது புறத்தில் உள்ள பிளைண்ட் ஸ்பாட்டுகளை கண்காணிக்கிறது. முன் பகுதியில் உள்ள சென்சார்கள் அதன் கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை ஆராய்கிறது.

முன் பகுதியில் உள்ள இடது சென்சார்கள், பின் பகுதியில் உள்ள இடது சென்சார்களுக்கு முன்பு வரும் வாகனங்களை கண்டறிந்தால், அது எதிரே வரும் வாகனம் தான் என கண்ட்ரோல் யூனிட்டுக்கு தெரிந்து விடுகிறது. இதனால், எந்த சமிஞ்சைகளையும் வழங்கப்படுவதில்லை.

அதே போல், பார்க்கிங் செய்யபட உள்ள வாகனங்கள் இருந்தாலும், எந்த சமிஞ்சைகளும் வழங்கடுவதில்லை.

முன்பகுதியில் உள்ள சென்ஸார்களுக்கு முன்பாக, பின் பகுதியில் உள்ள சென்ஸார்கள் ஏதேனும் வாகனத்தின் வருகையை உணர்ந்தால் மட்டும் தான் வாகன ஓட்டிக்கு சமிஞ்சைகள் வழங்கப்படுகிறது. இல்லையெனில், இந்த சைட் வியூ அசிஸ்ட் தேவையில்லாமல் வாகன ஓட்டிகள் கவனத்தை குழப்புவதில்லை.

சிக்கலான நிலைகளில் உதவும் தொழில்நுட்பம்;

சிக்கலான நிலைகளில் உதவும் தொழில்நுட்பம்;

இந்த சைடு வியூ அசிஸ்ட் என்று அழைக்கப்படும் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் சிக்கலான டிராஃபிக் சூழ்நிலைகளில் வாகன ஒட்டிகளுக்கு உதவிகரமாக உள்ளது.

மணிக்கு 25 முதல் 80 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வாகனங்கள் இயக்கபடும் போது சைடு வியூ அசிஸ்ட் செம்மையாக செயல்படுகிறது.

சைடு வியூ அசிஸ்ட் கொண்டுள்ள வாகன ஓட்டிகளுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையிலான வேக வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் போதும், இந்த சைட் வியூ அசிஸ்ட் தொழில்நுட்பம் செயல்படுகிறது.

நகரங்களில் மிகுந்த பயன்;

நகரங்களில் மிகுந்த பயன்;

இந்த சைடு வியூ அசிஸ்ட் நகரங்களில் மிகுந்த பாதுகாப்பு அளித்து பயனுள்ளதாக இருக்கிறது.

நகரங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து இருப்பதால், அங்கு அடிக்கடி சாலைகள் மற்றும் சந்துகளில் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை இருக்கும்.

Story first published: Wednesday, November 18, 2015, 10:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark