டட்சன் பிராண்டில் புதிய கிராஸ்ஓவர் மாடலை அறிமுகப்படுத்திய நிசான்!

By Ravichandran

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும், 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் டட்சன் கோ கிராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிறுவனம் டட்சன் பிராண்டில் குறைவான விலை கொண்ட கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது கோ என்ற ஹேட்ச்பேக் காரையும் மற்றும் கோ+ காம்பேக்ட் ஸ்டேஷன் வேகன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வரிசையில், டோக்கியோ மோட்டார் ஷோவில், டட்சன் கோ கிராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. அனேகமாக, இந்த கோ கிராஸ் மாடல் காரும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோ கிராஸ் மாடல் தற்போது கான்செப்ட் நிலையில்தான் உள்ளது. ஆனால், விரைவில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுவிடும் என்று தெரிகிறது. எஸ்யூவி வகை மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், இந்த புதிய மாடலும் வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

Datsun Go Cross was Debuted at 2015 Tokyo Motor Show

கான்செப்ட் நிலையில் உள்ள டட்சன் இந்த கோ கிராஸ் மாடல் காரின், ரைடு ஹைட் அதிகரிக்கபட்டுள்ளது. மறுவடிவமைக்கப்பட்ட ஃப்ரண்ட் (முன்) பம்பர்கள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பாடி கிட்டுகள் ஆஃப் ரோடர் எஸ்யூவி போன்ற தோற்றத்தை வழங்குகிறது. ஹெட்லைட்டுகளை ஒட்டி, பனி விளக்குகள் உயர்த்தப்பட்டுள்ளது. எல்.ஈ.டி பகல்நேர விளக்குகள் (டிஆர்எல்) தாழ்த்தி பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்போர்ட்டியான ரூஃப், இந்த காரின் ஸ்போர்டியான அம்சங்களை பரைசாற்றுவதாக உள்ளன.

இந்த டட்சன் கோ கிராஸ் மாடல் கார் உற்பத்திக்கு வரும்போது, எஞ்சினில் மாற்றமும் இருக்காது என்று நம்பலாம். கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ + ஸ்டேஷன் வேகன் கார்களில் உள்ள 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் உடைய பெட்ரோல் இஞ்ஜினே, இதற்கும் பொருத்தப்படும் என தெரிகிறது.

டட்சன் மிகவும் வெற்றிகரமான மறுபிரவேசம் செய்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் வின்செண்ட் கோபே தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இது வரை, 1,00,000 புதிய கார்கள் விற்கபட்டுள்ளதாக அவர் கூறினார். விற்பனை நெட்வர்க்களையும், சர்வீஸ் நெட்வர்க்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விரைவில் இந்திய வாகன சந்தையில், மூன்றாவதாக ஒரு புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய திட்டமுள்ளதாக வின்செண்ட் கூறினார். இப்படி அறிமுகமாக

உள்ள சிஎம்எஃப் - ஏ தளத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபடும் உருவாக்கபட உள்ள நிஸ்ஸானின் முதல் வாகனமாக இருக்கும். இது ரெனாட்-நிஸ்ஸானின் இணைந்த பங்களிப்பில் தயாரிக்கபட உள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இந்த புதிய கார், இந்தியாவில் 2016-ன் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்டும் என வின்செண்ட் தெரிவித்தார்.

இது டட்சனின் ரெடி-கோ காராக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரெடி-கோ காரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, க்ளிக் செய்யவும்

Most Read Articles
English summary
Datsun Go Cross was Debuted at the 2015 Tokyo Motor Show. The Go is currently available in India as a hatchback and a compact station wagon (Go+). It is most likely that Datsun will introduce this crossover model in India as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X