துபாய் மோட்டார் ஷோ: டிரைவ்ஸ்பார்க் தளத்தின் எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்!!

By Saravana

எண்ணெய் வளத்தால் செல்வ செழிப்பில் திளைக்கும் அரபு நாடுகள் உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் முக்கிய மார்க்கெட்டாக இருக்கின்றன. குறிப்பாக, விலையுயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களின் வேடந்தாங்கள் அரபு நாடுகள்தான். எனவே, அந்நாட்டு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் பல விலையுயர்ந்த மாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலக அளவில் முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் துபாயில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சி கார் நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. கடந்த 10ந் தேதி முதல் நாளை மறுதினம் வரை நடைபெறுகிற இந்த கண்காட்சியை, துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் வழக்கம்போல் பல விலையுயர்ந்த கார்கள் மற்றும் விசேஷ அம்சங்கள் கொண்ட கார்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் முன்னணி கார் மாடல்களை டிரைவ்ஸ்பார்க் தளம் பிரத்யேக கவரேஜ் மூலமாக வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறது. இருந்த இடத்திலிருந்தே துபாய் ஆட்டோ ஷோவை ஒரு சில நிமிடங்களில் கண்டுகளிக்கும் வாய்ப்பை வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். வாருங்கள் ஸ்லைடருக்கு செல்லலாம்.

01. ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட்...

01. ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட்...

லெபனான் நாட்டை சேர்ந்த டபிள்யூ மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய சூப்பர் ஸ்போர்ட் ரக கார் மாடல். ஃபெராரிகளுக்கும், லம்போர்கினிகளுக்கும் சவாலாய் களமிறங்கியிருக்கும் இந்த அரபு நாட்டுக் குதிரை பற்றிய கூடுதல் தகவல்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

 ஃபெனிர் கார் தொடர்ச்சி

ஃபெனிர் கார் தொடர்ச்சி

டபிள்யூ மோட்டார்ஸ் முன்பு அறிமுகம் செய்த லைக்கன் ஸ்போர்ட்ஸ் காரைவிட இது பாதி விலையில் வந்திருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், அரபு நாட்டு தயாரிப்பு என்ற முத்திரையும் இந்த காரின் மீதான கரிசனத்தை துபாய் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கூடுதல் தகவல்கள் கீழே உள்ள செய்தி இணைப்பில் காணலாம்.

டபிள்யூ மோட்டார்ஸின் ஃபெனிர் சூப்பர் ஸ்போர்ட் கார்

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன்

02. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன்

அரபு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் சொகுசு அம்சத்திற்கும், இடவசதிக்கும் ஏற்ற மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் கார் துபாய் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. லிமோசின் ரகத்தை இந்த கார் பலரையும் கவர்ந்திழுத்தது.

நம்ம ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ காரும் இதுதாங்க...

03. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி500 4x4

03. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி500 4x4

சொகுசையும், சாகசங்களையும் விரும்பும் அரபு இளைஞர்களுக்கான மாடலாக இந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி500 4x4 எஸ்யூவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. உலகின் காஸ்ட்லியான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான பென்ஸ் ஜி500 எஸ்யூவியை சுற்றிலும் ஏராளமான இளைஞர்கள் வட்டமடித்தனர்.

04. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்

04. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர்

லம்போர்கினி ஹூராகென் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல் துபாய் மோட்டார் ஷோவில் காட்சி தந்து பலரையும் பரவசப்படுத்தியது. அடுத்த ஆண்டு நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதையும் நினைவில் வைக்கவும்.

05. ஃபோர்டு ஜிடி40

05. ஃபோர்டு ஜிடி40

இந்த ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில், புதிய தலைமுறை மாடலாக ஃபோர்டு ஜிடி கார் அறிமுகம் செய்யப்பட்டது. கார் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கார் தற்போது துபாய் மோட்டார் ஷோவிலும் தரிசனம் கொடுத்து வருகிறது. 1960களில் கார் பந்தயங்களில் கலக்கிய ஃபோர்டு ஜிடி40 காருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஃபோர்டு ஜிடி பெருமைகள்...

ஃபோர்டு ஜிடி பெருமைகள்...

ஃபோர்டு ஜிடி40 கார் லீ மான்ஸ் கார் பந்தய போட்டியில் வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டத்திற்காக புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்ட அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் காரில் 591 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 3.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 0- 96 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 321 கிமீ வேகத்தில் செல்லும் கட்டமைப்பை பெற்றிருக்கும்.

 06. ஃபெராரி 488 ஸ்பைடர்

06. ஃபெராரி 488 ஸ்பைடர்

ஃபெராரி 488 ஸ்பைடர் கார் முதல்முறையாக துபாய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஃபெராரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளரான அல் டேயர் மோட்டார்ஸ் இந்த காரை காட்சிப்படுத்தியிருக்கிறது.

 ஃபெராரி 488 ஸ்பைடர் தொடர்ச்சி...

ஃபெராரி 488 ஸ்பைடர் தொடர்ச்சி...

இந்த காரில் 3,902சிசி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் தொட்டுவிடும் இந்த கன்வெர்ட்டிபிள் ரக ஸ்போர்ட்ஸ் கார். மணிக்கு 326 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

07. ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கன்வெர்ட்டிபிள்

07. ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கன்வெர்ட்டிபிள்

பழமையும், பாரம்பரிமும் மிக்க ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரின் கன்வெர்ட்டிபிள் மாடல் துபாய் ஆட்டோ ஷோவிற்கு வருவோரை தன் காந்த கண்களாலும், திறந்த மேனியாலும் கவர்ந்திழுத்து வருகிறது.

 ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கன்வெர்ட்டிபிள் தொடர்ச்சி

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கன்வெர்ட்டிபிள் தொடர்ச்சி

ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கன்வெர்ட்டிபிள் காரில் 5 சிலிண்டர்கள் கொண்ட 2.5 லிட்டர் எஞ்சின், 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட வகையிலும் பெற்றுக் கொள்ளலாம்.

08. கஸ்டமைஸ் ஆல்ஃபா ரோமியோ

08. கஸ்டமைஸ் ஆல்ஃபா ரோமியோ

அரபு நாட்டு வாடிக்கையாளர்கள் தனித்துவத்தை விரும்புகின்றனர். அதற்காக, வித்தியாசமான மாடல்களும் துபாய் மோட்டார் ஷோவில் இடம்பெற்றிருக்கின்றன. அதில், ஒன்று இத்தாலியை சேர்ந்த ஆல்ஃபா ரோமியோ காட்சிக்கு வைத்திருந்த 4சி ஸ்போர்ட்ஸ் கார். கார் கஸ்டமைஸ் செய்வதில் கைதேர்ந்தவரான லப்போ எல்கான்ஸின் வழிகாட்டுதல்களின்படி, கராஜ் இட்டாலியா கஸ்டமஸ் நிறுவனம் மாறுதல்களை செய்திருந்தது.

ஆல்ஃபா ரோமியோ தொடர்ச்சி

ஆல்ஃபா ரோமியோ தொடர்ச்சி

வெளிப்புறம் பிரத்யேக இரட்டை வண்ணக் கலவையிலும், சக்கரங்கள் தங்க நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்தின் வண்ணங்களிலேயே இந்த காரின் இன்டிரியர் முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அல்கான்ட்ரா உயர்தர லெதர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பார்வையாளர்களை வசீகரித்து நிற்கிறது.

09. பென்ட்லீ பென்டைகா

09. பென்ட்லீ பென்டைகா

உலகின் அதிவேக எஸ்யூவி, காஸ்ட்லி எஸ்யூவி என்ற பெருமைகளை தாங்கி வரும் பென்ட்லீ பென்டைகா துபாய் மோட்டார் ஷோவில் அரபு வாடிக்கையாளர்களை குஷி படுத்தி வரும் மாடலாக இருக்கிறது. இந்த சொகுசு எஸ்யூவியில் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 600 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவியில் இசட்எஃப் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும், இதனுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும். எனவே, இது நிச்சயமாக அரபு வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

10. டொயோட்டா மிராய்

10. டொயோட்டா மிராய்

உலகின் முதல் தயாரிப்பு நிலை ஹைட்ரஜன் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கும் டொயோட்டா மிராய் கார் துபாய் ஆட்டோ ஷோவில் இடம்பெற்றிருக்கிறது. எண்ணெய் வளத்தில் கொழிக்கும் அரபு நாட்டு சந்தையில், அதற்கு நேர்மாறான எரிபொருளில் இயங்கும் இந்த கார் தைரியமாக காட்சி தந்து வருகிறது. இந்த காருக்கு ஜப்பானில் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்திருக்கிறது.

டொயோட்டா மிராய் தொடர்ச்சி...

டொயோட்டா மிராய் தொடர்ச்சி...

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 650 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். மிராய் என்றால் ஜப்பானிய மொழியில் எதிர்காலம் என்று பொருள். இது அரபு நாடுகளுக்கும் சேர்த்துதான் என்று சொல்வது போல் மிராய் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

11. பிராபஸ் எஸ்65 ராக்கெட் 900

11. பிராபஸ் எஸ்65 ராக்கெட் 900

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் கஸ்டமைஸ் மற்றும் ட்யூனிங் மாற்றங்களுடன் கூடிய மாடல் துபாய் ஆட்டோ ஷோவில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு பசியாற்றி வருகிறது. பிராபஸ் ராக்கெட் 900 காரின் டெசர்ட் கோல்டு எடிசன் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கார் கூடுதல் பவர் கொண்டதாகவும், பிரத்யேகமான வண்ணத்திலும், கூடுதல் உபகரணங்களை கொண்டதாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராபஸ் ராக்கெட் 900 தொடர்ச்சி

பிராபஸ் ராக்கெட் 900 தொடர்ச்சி

சாதாரண எஸ்65 மாடலில் 621 எச்பி பவரை அளிக்க வல்ல 6.0 லிட்டர் வி12 எஞ்சின் இருக்கிறது. ஆனால், பிராபஸ் மாடலின் எஞ்சின் அதிகபட்சமாக 887 பிஎச்பி பவரை அளிக்கும் விதமாக மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தக்கவாறு சஸ்பென்ஷன், புகைப்போக்கி குழாய், 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவற்றுடன் அரபு இளைஞர்களை வசீகரித்து வருகிறது.

12. ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி

12. ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி

துபாய் மோட்டார் ஷோவில் ஜாகுவார் நிறுவனத்தின் எஃப் பேஸ் எஸ்யூவி மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஜாகுவார் சிஎக்ஸ்- 17 கான்செப்ட் அடிப்படையில் உருவான இந்த எஸ்யூவி தோற்றத்தில் மிக ஸ்டைலான மாடாலக இருக்கிறது. ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எஃப் கார்கள் கட்டமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவியும் இலகு எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி தொடர்ச்சி

ஜாகுவார் எஃப் பேஸ் எஸ்யூவி தொடர்ச்சி

இந்த புதிய ஜாகுவார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போடீசல் எஞ்சின் இருக்கும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 180 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். இதுதவிர, 300 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 3.0 லிட்டர் எஞ்சின் 340 பிஎச்பி மற்றும் 380 பிஎச்பி பவர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

13. ரோல்ஸ்ராய்ஸ் டான்

13. ரோல்ஸ்ராய்ஸ் டான்

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் புதிய கன்வெர்ட்டிபிள் கார் மாடலான டான் துபாய் மோட்டார் ஷோவில் காட்சி தந்து வருகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் மாடல்களிலேயே தோற்றத்தில் மிகவும் செக்ஸியான கார் மாடல் இதுதான் என்று அந்நிறுவனம் பெருமை பேசுகிறது. திறந்த அமைப்புடைய கார்களில் மிகவும் குறைவான கேபின் சப்தம் கொண்ட கார் மாடலாக குறிப்பிடப்படுகிறது. 4 பேர் செல்வதற்கான வசதி கொண்ட இந்த காரில் 563 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 6.6 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது.

14. ஜிஎம்சி சியரா எச்டி

14. ஜிஎம்சி சியரா எச்டி

ஜிஎம்சி சியரா எச்டி பிக்கப் டிரக் ஐக்கிய அமீரகத்தின் தேசியக் கொடி வண்ணத்துடன் துபாய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது அங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

15. மெக்லாரன் 650எஸ்

15. மெக்லாரன் 650எஸ்

மெக்லாரன் 650எஸ் காரும் அரபு நாட்டு கோடீஸ்வர இளைஞர்களை வசீகரித்து வருகிறது. துபாய் ஆட்டோ ஷோவில் மெக்லாரனின் சக்திவாய்ந்த பி1 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரும் இடம்பெற்று இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ ஷோ #auto show
English summary
2015 Dubai Motor Show - Drivespark Exclusive Coverage.
Story first published: Thursday, November 12, 2015, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X