2016 டுகாட்டி பனிகேல் 959 பைக் இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்

Written By:

டுகாட்டி நிறுவனத்தின் 2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபடுகிறது. .

இத்தாலியை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி, தங்கள் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதன் அடுத்த வெளியீடாக, 2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய 2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள், 955 சிசி, சூப்பர் குவாட்ரோ, லிக்விட் கூலிங் உடன் கூடிய எல்-ட்வின் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 154.88 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 107.4 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. டுகாட்டி குவிக் ஷிஃட் கொண்ட 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இதன் இஞ்ஜினை டுகாட்டி இஞ்ஜினியர்கள் இணைத்துள்ளனர்.

டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள் டுகாட்டி மோனோகாக் அலுமினியம் ஃபிரேம் கொண்டுள்ளது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

வடிவமைப்பாளர்களும், இஞ்ஜினியர்களும் ஸ்ட்ரீட் டைனமிக்ஸ் தெரு (ஸ்ட்ரீட்) இயக்கவியலுக்கும் (டைனமிக்ஸ்), டிராக் இயக்கவியலுக்கும் இடையில் ஒரு சமன்தன்மை கொண்டு வர முடிவு செய்தனர்.

இதனால், இந்த 2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளை, 899 பனிகேல் மற்றும் 1299 பனிகேல் மோட்டார்சைக்கிளுக்கு இடையில் வகைபடுத்தி, வடிவமைத்துள்ளனர்.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள் வடிவமைப்பானது, இந்நிறுவனத்தின் மற்ற இரு சூப்பர்பைக்குகளில் இருந்து, அளவுக்கு அதிகமாக வேறுபட்டு வடிவமைக்கபடவில்லை.

டுகாட்டி வடிவமைப்பாளர்கள், இந்த மோட்டார்சைக்கிளை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு ஏரோடைனமிக் தன்மையுடன் வடிவமைத்துள்ளனர்.

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளை, சாலைகளில் இயக்குவதற்கும், டிராக்குகளில் இயக்குவதற்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர்.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ஷோவாவின் உதிரி பாகத்தை கொண்டு, முன் சக்கரத்தின் சஸ்பென்ஷனும், சாக்ஸ் நிறுவனத்தின் உதிரி பாகங்களை கொண்டு பின் சக்கரத்தின் சஸ்பென்ஷனும் வடிவமைக்க பட்டுள்ளது.

இந்த இரு சக்கரங்களின் சஸ்பென்ஷனும் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யகூடியவையாகும்.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

இந்த 2016 டுகாட்டி பனிகேல் 959, பல்வேறு ஸ்டாண்டர்ட் அம்சங்களை கொண்டுள்ளது.

பவர் மோடுகள், ரைடிங் மோடுகள், ஸ்டீயரிங் டேம்பர், டிடிஏ+ ரெடி, முழுமையான ஆர்பிடபுள்யூ, ஏபிஸ், டிடிசி, டிக்யூஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டவற்றை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;

பிற அம்சங்கள்;

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளின் முன்னிலும், பின்னிலும், 10 ஸ்போக்குகள் கொண்ட, எடை குறைவான 17 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளது.

959 பனிகேல் மோட்டார்சைக்கிளுக்கு, பிரெல்லி டயாப்லோ ரோஸ்ஸோ கோர்ஸா டயர்கள் பொருத்தபட்டுள்ளது.

முன் சக்கரத்திலும், பின் சக்கரத்திலும், மோனோபிளாக் காலிபர் கொண்ட பிரேக் சிஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் தொழில் நுட்பத்துடன் வரும் இதன் பிரேக அமைப்பு, பாஷ் நிறுவனத்தால் வடிவமைக்கபட்டுள்ளது.

எடை;

எடை;

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளின் எடை 195 கிலோவாக உள்ளது.

1.0 லிட்டர் எஞ்சின் ரகத்திலான மோட்டார்சைக்கிளுக்கு இந்த எடை குறைவானதாகவே கருதபடுகிறது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்;

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம்;

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள், இஐசிஎம்ஏ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இஐசிஎம்ஏ மோட்டார் ஷோ, இத்தாலியின் மிலானோ என்ற நகரத்தில், நவம்பர் 19 முதல் 22-ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.

உலகில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தபடும் மோட்டார் ஷோ என்பது குறிப்பிடதக்கது.

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளின் வீடியோ;

2016 டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிளின் வீடியோ, உங்கள் பார்வைக்கு வழங்கபடுகிறது.

English summary
Ducati launches the 2016 Panigale 959 at EICMA Motorcycle Show 2015. The 959 Panigale is slotted between the 899 Panigale and 1299 Panigale Motorcycles. Ducati Designers and engineers have focused on finding perfect balance between the street dynamics and track dynamics for this 2016 Panigale 959 model.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark