லூயிஸ் ஹாமில்டன் பெயரில் ஸ்பெஷல் எடிசன் எம்வி அகுஸ்ட்டா பைக் அறிமுகம்!

By Ravichandran

லூயிஸ் ஹாமில்டன் மூலம் பிரபாவிக்கபட்டு உருவாக்கபட்டுள்ள லிமிடெட் எடிஷன் எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 என்ற மாடல் கார்

ஈஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் ஷோவில் அறிமுகம் செய்யபடுகிறது.

எம்வி அகுஸ்ட்டா பல்வேறு உயர் ரக பைக்களை அறிமுகபடுத்தி, தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டுள்ளது.

பெயர் காரணம்;

பெயர் காரணம்;

எம்வி அகுஸ்ட்டா அறிமுகம் செய்யும் இந்த எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44, பிரபல எஃப் 1 எனப்படும் ஃபார்முலா ஒன் பந்தய வீரர், லூயிஸ் ஹாமில்டன் பெயரையும், அவர் உபயோகிக்கும் வாகனத்தின் எண்ணையும் கொண்டுள்ளது.

லூயிஸ் ஹாமில்டன் என்ற பெயரில், லூயிஸ் என்ற பெயரின் முதல் பாதியான லூயிஸ்ஸில், முதல் ஆங்கில எழுத்தான ‘எல்' மற்றும், பெயரின் மறு பாதியான ஹாமில்டனில் இருந்து, ‘ஹெச்' என்ற எழுத்தும் கூட்டி ‘எல்ஹெச்' என்று சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த ‘எல்ஹெச்' என்ற இரு எழுத்துகளுடன், லூயிஸ் ஹாமில்டன் உபயோகிக்கும் ஃபார்முலா ஒன் காரின் எண்ணான 44-ளும் சேர்க்கபட்டு, ‘எல்ஹெச்44' என்று செய்யபட்டுள்ளது.

இப்படியாக, இந்த மோட்டார்சைக்கிளுக்கு எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 என்று பெயர் சூட்டபட்டுள்ளது.

லூயிஸ் ஹாமில்டனின் உள்ளீடுகள் சேர்ப்பு;

லூயிஸ் ஹாமில்டனின் உள்ளீடுகள் சேர்ப்பு;

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டனின் உள்ளீடுகள் அதிக அளவில் சேர்க்கபட்டுள்ளது.

ஹாமில்டன் வழங்கிய 55 டிசைன் மேம்பாடு ஆலோசனைகள், ஏற்று கொள்ளபட்டு, இந்த புதிய வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யபட்டுள்ளதாக எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிமிடெட் எடிஷன் மாடல்;

லிமிடெட் எடிஷன் மாடல்;

புதிய எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மாடலில், 244 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளதாக தெரிகிறது.

இந்த எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44, புருடேல் டிராக்ஸ்டர் 800 பைக்கை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள், இத்தாலியில் உள்ள ஷிரான்னா என்ற இடத்தில் தயாரிக்கபட உள்ளது.

ஸ்டைலிங்;

ஸ்டைலிங்;

ஃபார்முலா ஒன்-னில் லூயிஸ் ஹாமில்டன் உபயோகிக்கும் கிராஷ் ஹெல்மெட்டை அடிப்படையாக கொண்டு, இந்த எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மோட்டார்சைக்கிளின் கிராஃபிக்ஸ் மற்றும் டீகேல்கள் டிசைன் செய்யபட்டுள்ளது.

எஃப் ஒன்-னில், லூயிஸ் ஹாமில்டனின் எண் 44 ஆகும். அவர் உபயோகிக்கும் எண்ணும் இந்த எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மாடலின் எக்ஹாஸ்ட் மேனிஃபோல்ட்-டில் பதிக்கபட்டுள்ளது.

மேலும், இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளின் விண்ட்ஸ்கிரீனின் மீது லூயிஸ் ஹாமில்டனின் ஆட்டோகிராஃப் பதிக்கபட்டுள்ளது.

கிடைக்கும் நிறங்கள்;

கிடைக்கும் நிறங்கள்;

எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44, ஸ்பெஷலான வைட் (வெள்ளை) பெயிண்ட் லிவரியுடன் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் பேந்தர் லோகோவும் கொண்டுள்ளது. இந்த லோகோ, அல்காண்டரா சேட்டலுடன் வைத்து தைக்கபட்டுள்ளது.

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம்;

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015-ல் அறிமுகம்;

ஈஐசிஎம்ஏ மோட்டார் ஷோ 2015, இத்தாலியின் மிலானோ நகரத்தில் நடைபெற்று வருகிறது.

உலக அளவில் இரு சக்கர வாகனங்களுக்காக பிரத்யேகமாக நடத்தபடும் மோட்டார் ஷோவான இது, நவம்பர் 19, 2015 துவங்கி நவம்பர் 22, 2015 தேதி வரை நடை பெற உள்ளது.

புக்கிங்;

புக்கிங்;

எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மோட்டார்சைக்கிளின் புக்கிங்கள், டிசம்பர் 2015 முதல் ஏற்று கொள்ளப்பட உள்ளது.

எம்வி அகுஸ்ட்டா சமீபத்தில் தான், இந்திய வாகன சந்தையில் நுழைந்தனர். எம்வி அகுஸ்ட்டாவின் இந்திய டீலர்ஷிப்கள், எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மோட்டார்சைக்கிளின் ஏற்றுகொள்வார்கள் என தெரிகிறது.

டெலிவரி;

டெலிவரி;

இந்த லிமிடெட் எடிஷன் எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மோட்டார்சைக்கிளின் டெலிவரி, உலகம் முழுவதிலும், 2016-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

எம்வி டிராக்ஸ்டர் ஆர்ஆர் எல்ஹெச்44 மாடலின் விலை குறித்து எந்த விதமான தகவலும் இது வரை வெளியிடப்படவில்லை.

எனினும், இதன் விலை ஸ்டாண்டர்ட் டிராக்ஸ்டர் மோட்டார்சைக்கிளை காட்டிலும் நிச்சயம் விலை உயர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Lewis Hamilton Inspired MV Agusta Dragster RR LH44 Unveiled At EICMA Motorcycle Show. The MV Agusta Dragster RR LH44 Motorcycle design and engineering are developed from inputs received from the British Formula One racing driver, Lewis Hamilton.
Story first published: Thursday, November 19, 2015, 11:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X