துபாய் மோட்டார் ஷோவில் நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் அறிமுகம்

Written By:

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் கார், 2015 துபாய் மோட்டர் ஷோவில், உலகளாவிய அறிமுகம் (குளோபல் டெப்யூட்) செய்யப்பட்டிருக்கிறது.

நிஸ்ஸான் மோட்டர்ஸ் நிறுவனம், பாலைவனங்களில் இயக்க ஏதுவான தங்களது நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷனை அறிமுகம் செய்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

2015 துபாய் மோட்டர் ஷோ;

2015 துபாய் மோட்டர் ஷோ;

2015 துபாய் மோட்டர் ஷோ, துபாய் வேர்ல்ட் டிரேட் செண்டரில் நடைபெறுகின்றது.

இந்த துபாய் மோட்டர் ஷோ, நவம்பர் 11 முதல் நவம்பர் 14 வரை நடை பெற்று கொண்டிருகின்றது. இதில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, வெவ்வேறு வகையான வாகனங்கள் காட்சிபடுத்தபடுகின்றன.

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன்;

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன்;

நிஸ்ஸான் மோட்டர்ஸ் நிறுவனம், பாலைவனங்களில் இயக்கும் வகையிலான நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் என்ற பிரத்யேக காரை அறிமுகம் செய்துள்ளனர்.

இது, சாலையிலும், பாலைவனங்களிலும் இயக்கும் வகையில் திறன் கொண்டுள்ளது.

அனைத்து தரப்பினருக்கும் பொதுவான வாகனங்களை தயாரித்து வந்த நிஸ்ஸான் நிறுவனம், மத்திய கிழக்கு நாடுகள் போல், பிராந்திய வாடிக்கையாளர்களையும் மையபடுத்தி, தற்போது வாகனங்களை உருவாக்கி வருகின்றனர்.

ஸ்டாண்டர்ட் வெர்ஷன் / டெஸர்ட் எடிஷன்;

ஸ்டாண்டர்ட் வெர்ஷன் / டெஸர்ட் எடிஷன்;

நிஸ்ஸான் நிறுவனத்தின், நிஸ்ஸான் பேட்ரோல் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் காரும் நல்ல ஆஃப் ரோடர் (சாலைகள் அல்லாத பகுதிகளிலும் இயக்ககூடிய) காராக உள்ளது.

எனினும், நிஸ்ஸான் பேட்ரோலின் இந்த புதிய டெஸர்ட் எடிஷன் காரானது, உலகின் மிக கடுமையான பாலைவன பகுதிகளில் கூட திறன் பட பயணிக்க முடியும்.

இந்த நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் காரின் ஆக்கம் மற்றும் உருவாக்கம், மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முன்னோடியாக விளங்கும் டாக்டர். மொஹம்மத் பென் சுலாயமின் ஆலோசனைகளை பெற்று உருவாக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டெஸர்ட் எடிஷன் கார், நிஸ்ஸான் பேட்ரோல் எல்ஈ மாடலை மையப்படுத்தி தயாரிக்கபட்டுள்ளது. இது நிஸ்ஸானின் சக்திவாய்ந்த 5.6 லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டுள்ளது.

டெஸர்ட் எடிஷன் காரின் இஞ்ஜின், 400 பிஹெச்பி-யையும், 560 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது 7-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

இது எந்த நிலபரப்பில் இயக்கினாலும், சிறந்த திறனை வெளிபடுத்தும் வகையில், மேனுவல் மோட் மற்றும் சிங்க்ரோனைஸ்டு ரெவ் கண்ட்ரோல் அமைப்பு கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

ஆஃப் ரோடிங் (சாலைகள் அல்லாத பகுதிகளிலும் இயக்ககூடிய) கார்களின் விஷயத்தில், சஸ்பென்ஷன் அம்சத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.

நிஸ்ஸான் குழுவினரும், டாக்டர். மொஹம்மத் பென் சுலாயம் அவர்களும் இணைந்து, பாலைவனங்களில் மேற்கொண்ட பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர், இந்த நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் காரின் இறுதி வடிவத்தை வடிவமைத்துள்ளனர்.

சிறந்த ஆஃப் ரோடிங் அம்சங்கள்;

சிறந்த ஆஃப் ரோடிங் அம்சங்கள்;

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் "பீட்-லாக் வீல்ஸ்" போன்ற கூடுதல் ஆஃப் ரோடிங் அம்சங்களுடன் வருகின்றது. இதில் உள்ள இந்த "பீட்-லாக் வீல்ஸ்" கூடுதல் அம்சமானது, பாலைவனங்களில் இயக்கும் போதும், டெஸர்ட் எடிஷன் காரை மிக குறைந்த அழுத்ததிலும் (டயர்களில் குறைந்த காற்றுடன்) இயக்க உதவுகிறது.

மேலும், டெஸர்ட் எடிஷன் காரில் ஆன் - போர்ட் இன்ஃப்ளேட்டர் வசதியும் உள்ளது. டெஸர்ட் எடிஷன் பாலைவனத்தில் இருந்து சாலைகளுக்கு மீண்டும் கொண்டு வர, அதன் டயர்களில் சரியான அளவில் அழுத்தம் தேவைப்படும். ஆன் - போர்ட் இன்ஃப்ளேட்டர் வசதி மூலம் கார்களின் டயர்களில் சரியான அளவில் காற்றை மீண்டும் நிரப்ப உதவுகிறது.

பிற சிறப்பம்சங்கள்;

பிற சிறப்பம்சங்கள்;

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் கார், ஃபார்வர்ட் ஃபேசிங் (முன் நோக்கிய) மற்றும் ரிவர்ஸிங் கேமராக்கள் உடைய, மிக உயரிய தரத்திலான நேவிகேஷன் சிஸ்டம் கொண்டுள்ளது.

மேலும், இதில் புளூ-டூத் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சிஸ்டமும் உள்ளது .

விலை;

விலை;

நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் கார், 69,430 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 45,92,872.86 ரூபாய்) விலையில் கிடைக்கின்றது.

இது, ஐக்கிய அரபு அமீரக சந்தைகளில், உடனே விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் கார் மூலம் அதிக லாபம் இல்லை என்று, நிஸ்ஸானின் மத்திய கிழக்கு பகுதிகளுக்கான தலைமை அதிகாரி சமீர் ஷெர்ஃபான் கூறினார்.

எனினும், நிஸ்ஸான் பேட்ரோல் டெஸர்ட் எடிஷன் கார், பாலைவனங்களில் இயக்க தகுந்த திறன்மிக்க வாகனத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே தயார் செய்யபட்டது என நிஸ்ஸான் நிறுவனம் தெரிவிக்கிறது.

English summary
The Nissan Patrol Desert Edition made its global debut at the 2015 Dubai Motor Show. The new edition is a clear sign that Nissan is committed to delivering tailored models for regional consumers. The new Nissan Patrol Desert Edition is priced at $69,430 in the UAE.
Story first published: Thursday, November 12, 2015, 15:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark