டோக்கியோ மோட்டார் ஷோவிற்கு முன்பா நிஸ்ஸான் ஃபயூச்சர் விஷன் கார் டீசர்!

Written By:

நிஸ்ஸான் ஃப்யூசர் விஷன் கார் கான்செப்ட்டின் டீசரை, 2015 டோக்கியோ மோட்டர் ஷோவிற்கு முன்னதாக வெளியிட்டது.

2015 டோக்கியோ மோட்டர் ஷோ அக்டோபர் 29 முதல் நவம்பர் 8-ஆம் தேதிவரை நடை பெறுகின்றது. இந்த கட்டத்தில், நிஸ்ஸான் நிறுவனம் பல்வேறு வகையிலான புதிய தலைமுறை கான்செப்ட் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது.

இதில், மிக முக்க்கியமானதாக கருதப்படும் கான்செப்ட் காராக விளங்குவது, சிறிய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்கள் தான். இந்த டீசர்கள் மூலம் அடுத்த தலைமுறை நிஸ்ஸான் லீஃப் (எலக்ட்ரிக் கார்) எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.

Nissan releases Teaser of Nissan Leaf ahead of 2015 Tokyo Motor Show

இருண்ட நிழல் போன்ற உருவப்படத்தை (சில்ஹௌட் போன்ற படம்) மட்டுமே நிஸ்ஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கான்செப்ட் கார் தானியங்கி முறையில் வாகனத்தை இயக்கும் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய வடிவமைப்பில், எல்ஈடி-ஸ்கர்டட் ஹெட்லைட்கள், வி-மோஷன் கிரில் மற்றும் ஸ்ப்ளிட் சி-பில்லர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த புதிய தலைமுறை நிஸ்ஸான் லீஃப் 2017-ஆம் ஆண்டில் வெளிவரும் என தெரிகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் தற்போது உள்ள 250 கிலோமீட்டர் முதல், 400 கிலோமீட்டராக உயர்த்தப்பட உள்ளது.

இந்த டீசரை கண்டதில் இருந்து, இந்த புதிய தலைமுறை நிஸ்ஸான் லீஃப் கான்செப்ட் கார், 2015 டோக்கியோ மோட்டர் ஷோ-விலேயே வெளியிடப்படும் என ஆவலை ஏற்படுத்தியுள்ளது. அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்கள், ஆட்டோ-பைலட் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்ட மின்சார கார்களை தயாரிக்கும் போட்டி பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே துவங்கிவிட்டது.

இனி வரும் காலங்களில், இத்தகைய கார்களின் அறிமுகங்கள் கூடிக்கொண்டே இருக்கும் என நம்பலாம்.

English summary
Nissan is all set to unveil a new generation of concept cars at the 2015 Tokyo Motor Show. One of the interesting concepts will be a small electric hatchback, which may just showcase what the next-generation Nissan Leaf (Electric Car) is all about.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark