சென்னையில் தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போ... இன்றும், நாளையும் நடக்கிறது!

Written By:

தி ஹிந்து பத்திரிக்கை குழுமம் நடத்தும், தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போ சென்னையில் இன்று துவங்கியுள்ளது.

தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போவின் 5-வது எடிஷன், இன்று (அக்டோபர் 31, 2015) துவங்கி, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆட்டோ எக்ஸ்போ, இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

தி ஹிந்துவின் ஆட்டோ எக்ஸ்போ , சென்னையில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. ஆட்டோமொபைல் துறையில், சென்னை மிக முக்கியமான உற்பத்தி மையம் மற்றும் சந்தையாக விளங்குவதால், இந்த ஆட்டோ எக்ஸ்போ சென்னையில் நடைபெறுவது மிக பொருத்தமானதாக உள்ளது.

The Hindu Auto Expo held in Chennai

இந்த எக்ஸ்போவில், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள், வாகன கடனுதவி வழங்குபவர்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்பவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

தி ஹிந்து ஆட்டோ எக்ஸ்போவில், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றது. சொகுசு கார்கள் மற்றும் மோட்டர்சைக்கிள்களுக்கு என பிரத்யேக அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில், ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தி நிறுவனங்கள், கடனுதவி வாய்ப்புகள், பிடித்த வாகனங்கள் குறித்த அதிகப்படியான தகவல்களை தெரிந்து கொள்ள, வாடிக்கையாளர்களுக்கும் இந்த எக்ஸ்போ சிறந்த தளமாக விளங்குகிறது.

ரெனோ இந்தியாவால் நடத்தபடும் இந்த எக்ஸ்போவில், ஹோண்டா கார்ஸ் மற்றும் ஸ்கோடா கார் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகிறது.

இந்த எக்ஸ்போ, அக்டோபர் 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில், சென்னை ட்ரேட் சென்டரில் உள்ள ஹால் 3-ல், காலை 10.30 முதல் இரவு 8.30 மணி நிகழ்கிறது.

இந்த எக்ஸ்போவில், பங்குகொள்வதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கபடுகிறது.

English summary
The Hindu Auto Expo begins in Chennai. The fifth edition of The Hindu Auto Expo 2015 is held on October 31 and November 1, 2015. This two-day event is held at Chennai Trade Centre in Nandambakkam. This Expo feature automobile manufacturers, providers of auto loans, manufacturers and sellers of automobile-related products.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark