2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய முக்கிய தகவல்கள்

Written By:

2016 டெல்லி எக்ஸ்போவிற்கு செய்யப்பட்டிருக்கும் விரிவான ஏற்பாடுகள் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்.

ஆட்டோ எக்ஸ்போ-தி மோட்டர் ஷோ 2016, ஆட்டோமோட்டிவ் காம்போனண்ட் மேனுஃபேக்சுரர்ஸ் அஸோசியேஷன் ஆஃப் இந்தியா (ஏசிஎம்ஏ), கான்ஃபிடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரீஸ் (சி.ஐ.ஐ கூட்டமைப்பு) உடன் இணைந்து, சொஸைட்டி ஆஃப் இண்டியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சுரர்ஸ் அஸோசியேஷன் (எஸ்ஐஏஎம்) அமைப்பினால் நடத்தப்படுகிறது.

2016-ல் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ இன்னும் பெரியதாக, சிறந்ததாகவும், மேலும் சிறப்பாகவும் இருக்க உள்ளது. இந்த ஆட்டோ எக்ஸ்போ நடப்பதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது என்றாலும், இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

புதிய கட்டுமானங்கள்;

புதிய கட்டுமானங்கள்;

தி இந்தியா எக்ஸ்போ மார்ட் லிமிடெட்-டின் (ஐஈஎம்எல்) மையத்திற்கு மாபெரும் அளவில் பொலிவு கூட்டபட்டுள்ளது.

சமீபத்தில், ஏராளமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் 6 பெரிய அரங்கங்கள் கட்டபட்டுள்ளன. இதையடுத்து, 37240 சதுர மீட்டர்கள் கார்பெட் ஏரியா (அரங்க அளவு) கூட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இருந்த வசதிகள்;

முன்னதாக இருந்த வசதிகள்;

முன்னதாக, 27,648 சதுர மீட்டர்கள் அளவிலான 8 நிரந்தர அரங்கங்கள் மட்டுமே இருந்தன.

2014-ஆம் ஆண்டு ஆட்டோ ஷோவின் போது, இந்த வசதிகள் போதாமல் இருந்ததால், 32,400 சதுர மீட்டர்கள் அளவிலான தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, ஐஈஎம்எல் 9, 10, 11, 12, 13, 14, 15 உள்ளிட்ட எண்களில் புதிய அரங்கங்கள் நிரந்தர அரங்கங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரங்கங்களுக்கு, ஏர்-கண்டிஷனிங் மற்றும் பவர் சப்ளை கேபிளிங் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரங்கங்களுக்கான புக்கிங்கள்;

அரங்கங்களுக்கான புக்கிங்கள்;

இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் அனைத்து அரங்கங்களும் ஏற்கனவே புக்கிங் செய்யபட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

பங்கேற்கும் 4 சக்கர வாகன நிறுவனங்கள்;

பங்கேற்கும் 4 சக்கர வாகன நிறுவனங்கள்;

இந்த 2016 டெல்லி எக்ஸ்போவில் ஏராளமான 4 சக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

தற்போது நிலையில், மெர்சிடிஸ், ஜேஎல்ஆர், ஆடி, பிஎம்டபுள்யூ, ஜீப், ஃபியட், ஃபோர்ட், டாடா மோட்டர்ஸ், மஹிந்திரா, மாருதி உள்ளிட்ட 4 சக்கர நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என எதிர்பார்க்கபடுகிறது.

பங்கேற்கும் 2 சக்கர வாகன நிறுவனங்கள்;

பங்கேற்கும் 2 சக்கர வாகன நிறுவனங்கள்;

2016 டெல்லி எக்ஸ்போவில் ஏராளமான 2 சக்கர வாகன நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

தற்போதைய சூழ்நிலையில், ஹீரோ மோட்டர்கார்ப், டிவிஎஸ், ஹோண்டா மோட்டர்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர்ஸ், யமஹா இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. புதிய பிராண்ட்களான டிஎஸ்கே பெனெல்லி, பிஎம்டபுள்யூ மோட்டராட், பொலாரிஸ் உள்ளிட்ட புதிய பிராண்ட்களும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதற பங்கேற்பாளர்கள்;

இதற பங்கேற்பாளர்கள்;

வாகன உற்பத்தியாளர்களை தவிர, டையர்கள் மற்றும் டயர்களை தயாரிக்கும் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், ஆட்டோமோட்டிவ் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மேலும், இஞ்ஜினியரிங் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், நிதி நிறுவனங்கள், ஆட்டோ இன்சூரன்ஸ் நிறுவனங்களும், மீடியா மற்றும் ஆட்டோ பப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட பல தரப்பட்ட

மக்கள் இந்த 2016 டெல்லி எக்ஸ்போவில் பங்கேற்க உள்ளனர்.

மக்களின் ஈடுபாடு;

மக்களின் ஈடுபாடு;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்குபெற மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த எக்ஸ்போவில், குறைந்தபட்சம் 6 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 2015 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்றவர்களை காட்டிலும் 20 சதவிகிததிற்கும் கூடுதலாக இருக்கும்.

எக்ஸ்போ நிகழும் இடம், தேதி;

எக்ஸ்போ நிகழும் இடம், தேதி;

2016 ஆட்டோ எக்ஸ்போ - தி மோட்டர் ஷோ நிகழும் இடம்;

இந்தியா எக்ஸ்போர்ட் மார்ட், கிரேட்டர் நொய்டா, டெல்லி என்.சி.ஆர்

தேதி --- 2016 ஃபிப்ரவரி 5 முதல் ஃபிப்ரவரி 9 வரை

2016 ஆட்டோ எக்ஸ்போ - உபகரணங்கள் (காம்போனண்ட்ஸ்) ஷோ நிகழும் இடம்;

பிரகதி மைதான், புது டெல்லி,

தேதி --- 2016 ஃபிப்ரவரி 4 முதல் 7 வரை

அறிமுகங்கள்;

அறிமுகங்கள்;

2014-ல் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை பற்றி ஒரு சிறப்பு கண்ணோட்டமாக, சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

டெல்லி எக்ஸ்போ தொடர்ந்து உலக அளவில் அதிக மக்கள் பங்குபெறும் எக்ஸ்போவாக உள்ளது. 2014-ல் 12வது சர்வதேச வாகனக் கண்காட்சியில், 70 புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில், 26 மாடல்கள் சர்வதேச அளவில் அறிமுகமாகியது என்பது குறிப்பிடதக்கது. இதுதவிர, ஏராளமான புதிய இருசக்கர வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

மக்களின் பங்கேற்பு;

மக்களின் பங்கேற்பு;

12வது சர்வதேச வாகனக் கண்காட்சியில், மொத்தம் 5.61 லட்சம் பார்வையாளர்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

கடைசி நாளில் மட்டும் 90,000 பார்வையாளர்கள் வருகை தந்ததாக எக்ஸ்போ ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நட்சத்திர பட்டாளம்;

நட்சத்திர பட்டாளம்;

2014-ல் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், நடைபெற்ற வாகன அறிமுகங்களின் நிகழ்ச்சிகளில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் ஃபோட்டோக்களை காண,

கிளிக் செய்யவும்...

English summary
These are the things you should know about 2016 Delhi Auto Expo. Auto Expo - The Motor Show 2016 is being organized by Society of Indian Automobile Manufactures (SIAM) jointly with Automotive Component Manufacturers Association of India (ACMA), and Confederation of Indian Industry (CII). The 2016 Auto Expo is scheduled to take place from 5th to 9 February 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark