லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் வால்வோ கான்செப்ட் 26 அறிமுகம்!

Written By:

டிரைவர் துணையில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை வடிவமைப்பதற்கான தீவிர முயற்சியில் இறங்கிய நிறுவனம் வால்வோ. அதன்பிறகே, பிற கார் நிறுவனங்கள் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் அடுத்தடுத்து குதித்தன.

இந்தநிலையில், தானியங்கி கார் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக ஓர் புதிய கான்செப்ட் மாடலை வால்வோ அறிமுகம் செய்துள்ளது. வால்வோ கான்செப்ட் 26 என்று அழைக்கப்படும் இந்த புதிய மாடல் இன்று துவங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

 கான்செப்ட் 26

கான்செப்ட் 26

அமெரிக்காவில் தினசரி அலுவலகம் செல்வதற்கான சராசரி நேரமாக 26 நிமிடங்களாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, கான்செப்ட் 26 என்று பெயரிட்டதாக வால்வோ தெரிவித்துள்ளது.

பயனுள்ளதாக்கும் தானியங்கி கார்

பயனுள்ளதாக்கும் தானியங்கி கார்

தானியங்கி காரில் பயணிப்பவர்களின் நேரத்தை பயனுள்ள வகையிலும், ஓய்வாக மனதை ரிலாக்ஸ் செய்வதற்கும் ஏதுவாக இந்த கான்செப்ட் 26 மாடலை வால்வோ வடிவமைத்துள்ளது.

மூன்று வித ஆஃப்ஷன்கள்

மூன்று வித ஆஃப்ஷன்கள்

Dirve, Create மற்றும் Relax என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது, ஓட்டுபவர் இந்த மூன்று விதமான ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

வசதி

வசதி

டிரைவ் ஆப்ஷனில் காரை வைத்து ஓட்டும்போது, காரை சாதாரணமாக ஓட்டுவதற்கு ஒப்பானதாக இருக்கும். கிரியேட்டிவ் ஆப்ஷனுக்கு மாற்றும்போது ஸ்டீயரிங் வீல் டேஷ்போர்டுடன் ஒன்றி விடும் என்பதுடன், இருக்கையும் சற்று பின்னோக்கி நகர்ந்துகொள்ளும். மேலும், சென்டர் கன்சோலில் இருக்கும் டேப்லெட் மூலமாக அலுவலக வேலை அல்லது பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். அடுத்து, ரிலாக்ஸ் ஆப்ஷனில் வைத்தால், இருக்கை முழுவதுமாக பின்னால் சாய்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல முடியும்.

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

சென்டர் கன்சோலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், டேஷ்போர்டிலும் ஒரு பெரிய திரை தேவைப்படும்போது வெளியே வரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த தலைமுறை

அடுத்த தலைமுறை

இந்த தொழில்நுட்பம் தானியங்கி கார்களின் சொகுசு மற்றும் தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary

 Volvo lifted the veil of its Concept 26 at the Los Angeles Auto Show. The 26 in the name, is for the average commute time in the United States.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark