2016 டாடா பிரைமா டிரக் ரேஸிங் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு!

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் சார்பில் நடத்தப்பட உள்ள, 2016 டி1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 17 இந்திய வீரர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப் குறித்தும் அதில் பங்கேற்கும் இந்திய டிரைவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டி1 ரேசிங் புரோகிராம் (டிஆர்பி) பற்றி...

டி1 ரேசிங் புரோகிராம் (டிஆர்பி) பற்றி...

இந்தியாவில் டிரக் பந்தய வீரர்களை உருவாக்கும் விதத்தில் டி1 ரேசிங் புரோகிராம் என்ற பயிற்சி திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அறிவித்தது.

திறமையான இந்திய டிரக் பந்தய வீரர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த பயிற்சி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்த திட்டத்தில் தேர்வான டிரக் பந்தய வீரர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், தற்போது 17 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

நான்காம் கட்டமாக நடைபெற உள்ள போட்டியில் தேர்வாகும் 12 இந்திய வீரர்கள் வரும் 20ந் தேதி நடைபெற இருக்கும் டி1 பிரைமா டிரக் ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்பபை பெற இருக்கின்றனர்.

டி1 2016 ரேஸ் டிரக் காட்சிபடுத்தல்;

டி1 2016 ரேஸ் டிரக் காட்சிபடுத்தல்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் டி1 2016 ரேஸ் டிரக்கை, இந்த இந்திய டிரைவர்கள் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது காட்சிபடுத்தினர்.

டி1 2016 ரேஸ் டிரக் வாகனத்தை மேலும் பாதுக்காப்பானதாகவும், வேகமாக இயங்க செய்யவும், இதற்கு 43 கூடுதல் மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

இந்த 2016 டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப்பின் 3-வது பதிப்பு ஆகும்.

டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப் - நாள், இடம்;

டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப் - நாள், இடம்;

2016 டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப்பின் இறுதிசுற்று மார்ச் 20, 2016 அன்று டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப் - விவரங்கள்;

டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப் - விவரங்கள்;

2016 டி1 பிரைமா டிரக் ரேசிங் சேம்பியன்ஷிப், இரண்டு பிரிவுகளில் 4 பந்தயங்களை கொண்டுள்ளது.

முதல் பிரிவு, ‘சூப்பர் கிளாஸ்' என்று அழைக்கபடுகிறது. இதில், டி1 பிரைமா ரேசிங் புரோகிராம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 12 இந்திய டிரக் டிரைவர்களுக்கான போட்டியாக அமைய உள்ளது.

2-வது பிரிவான‘ப்ரோ கிளாஸ்' போட்டியில், அனுபவமுள்ள சர்வதேச டிரக் பந்தய வீரர்களுக்கானதாக நடைபெற இருக்கிறது.

17 இந்திய டிரைவர்கள் - பட்டியல் 1;

17 இந்திய டிரைவர்கள் - பட்டியல் 1;

(1) சையது அக்ரம் பாஷா

(2) பச்சு சிங்

(3) ஏ. நாகார்ஜுனா

(4) மல்கீத் சிங்

(5) ரகுவீர்

(6) ஆனந்த்

(7) ஜிதேந்திர சிங்

(8) ரபீந்தர்

(9) பாக் சந்த்

17 இந்திய டிரைவர்கள் - பட்டியல் 2;

17 இந்திய டிரைவர்கள் - பட்டியல் 2;

(10) எம். ராஜ்குமார்

(11) ஜகத் சிங்

(12) ஷங்கர்

(13) எம்டி பர்வேஸ்

(14) எம். பிகாஷ்

(15) கோபிந்த் சிங்

(16) பதம் சிங்

(17) எம்டி இலியாஸ்

சர்வதேச அணிகளின் விபரம்;

சர்வதேச அணிகளின் விபரம்;

(1) டீம் கேஸ்ட்ரால் வெக்டான்

(2) டீம் கம்மின்ஸ்

(3) டீம் டாடா டெக்னாலஜீஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ்

(4) டீம் டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ்

(5) டீம் டீலர் வாரியர்ஸ்

(6) டீம் டீலர் டேர்டெவில்ஸ்

இதர கூட்டாளிகள்;

இதர கூட்டாளிகள்;

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள வேறு சில ஆட்டோமோட்டிவ் பிராண்ட்களுடன் கைகோர்த்துள்ளனர்.

வாப்கோ ; பிரேக் சிஸ்டத்திற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும்

ஜேகே டயர் ; டயர்களை வழங்கும் நிறுவனம்

கேஸ்ட்ரால் ; ஆயில் வழங்கும் நிறுவனம்

கம்மின்ஸ் ; எஞ்சின் தொழில்நுட்பத்திற்கான ஒத்துழைப்பை வழங்கும்

டாடா மோட்டார்ஸ் ஃபைனான்ஸ் ; அலுவல் ரீதியான வர்த்தக வாகன நிதி வழங்கும் நிறுவனம்

டாடா டெக்னாலஜீஸ் ; அலுவல் ரீதியான தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பெங்களூர் குளிரில் அனலை பரப்பிய கார் பந்தயம்- எக்ஸ்க்ளூசிவ் கவரேஜ்!

2016 டக்கார் ராலி நிறைவு - டாப் 10 இடங்கள் பெற்றவர்கள் குறித்த விரிவான தகவல்கள்

டக்கார் ராலி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Tata Motors has presented the details of 17 Indian truck drivers, who would compete in the level 4 of the T1 Racing Program (TRP). The final round of TRP T1 Racing Program would determines 12 finalists who would race in 2016 T1 Prima Truck Racing Championship. T1 Prima Truck Racing would be held under 2 categories and 4 races.
Story first published: Thursday, March 3, 2016, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X