உலகின் மிகவும் விலை உயர்ந்த டயர்களின் மதிப்பு என்ன என்று தெரியுமா?

By Ravichandran

உலகின் மிகவும் விலை உயர்ந்த டயர்கள் உருவாக்கபட்டு கின்னஸ் சாதனை நிகழ்தபட்டுள்ளது.

விலை உயர்ந்த டயர்கள் குறித்தும், கின்னஸ் சாதனை தொடர்பான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கின்னஸ் சாதனை;

கின்னஸ் சாதனை;

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த டயர்களை உருவாக்கிய கின்னஸ் சாதனை, துபாயை மையமாக கொண்டு இயங்கும் இசட்-டயர் (Z-Tyre) என்ற நிறுவனம் மூலம் நிகழ்த்தபட்டுள்ளது.

மதிப்பு;

மதிப்பு;

தங்கம் மற்றும் வைரம் கொண்டு உருவாக்கபட்ட இந்த டயர்களின் மதிப்பு, 4.02 கோடி ரூபாய் ($600,000 - 600,000 அமெரிக்க டாலர்கள்) என்ற அளவில் உள்ளது.

தொண்டுக்கு செல்லும் பணம்;

தொண்டுக்கு செல்லும் பணம்;

கின்னஸ் சாதனை படைத்த 4.02 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட டயர்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம், தொண்டு பணிகளுக்கு வழங்கப்படும்.

டயர்கள்;

டயர்கள்;

இந்த 295/35 ZR21 107Y XL டயர்கள், 24 காரட் தங்கம் மற்றும் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கபட்ட வைரங்கள் கொண்டு உருவாக்கபட்டுள்ளது.

இந்த டயர்கள் செய்வதற்கு ஆர்டர் வழங்கிய நபர் குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

சீனாவில் தயாரிப்பு;

சீனாவில் தயாரிப்பு;

கின்னஸ் சாதனை படைத்த இந்த டயர்கள், சீனாவின் ஷாண்டாங் பிராந்தியத்தின் கிங்க்டாவ் (Qingdao) என்ற இடத்தில் உள்ள சென்டுரி டயர் ஃபெக்டரில்யில் (Sentury Tire factory) தயாரிக்கபட்டது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

இந்த டயர்கள் செய்ய உபயோகிக்கப்பட்ட வைரங்கள், இந்த்தாலியை சேர்ந்த கைவினைஞர்கள் மூலம் டயர்களில் பதிக்கப்பட்டுள்ளது (எம்பெட்).

இந்த டயர்களில் செய்யபட்ட தங்க இலை போன்ற (கோல்ட் லீஃப் வரக்-Gold leaf work) வேலைப்பாடுகள் செய்தவர்கள் தான், அபு தாபியில் உள்ள அதிபர் அரண்மனையையும் (ப்ரெசிடென்ஷியல் பேலஸ் - Presidential Palace) அலங்கரித்தனர்.

சிஇஓ கருத்து;

சிஇஓ கருத்து;

இசட்-டயர் நிறுவனத்தின் சிஇஓ-வான ஹர்ஜீவ் கந்தாரி, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு கின்னஸ் சாதனை படைத்ததை குறித்து மிகுந்த பெருமிதம் வெளிப்படுத்தினார்.

மேலும், "நாங்கள் எங்களது அசாதாரண திறன்களையும், அர்ப்பணிப்பையும் கொண்டு இசட்-டயர் தயாரிப்ப்புகளை உருவாக்கி வருகிறோம். இதனை கொண்டாடும் விதமாக, பெயர் வெளியிடப்படாத நபர் வழங்கிய ஆர்டர் மூலம் கின்னஸ் சாதனை படைக்கும் டயர்களை உருவாக்கி உள்ளோம்" என்றார்.

தொண்டுக்கு செல்லும் நிதி;

தொண்டுக்கு செல்லும் நிதி;

"புனித மாதமான ரம்ஜானை மனதில் கொண்டு, இந்த டயர்கள் மூலம் கிடைக்கும் நிதியை, இசட்-டயர் நிறுவனம் செனிசிஸ் ஃபவுண்டேஷன் (Zenises Foundation) எனப்படும் அமைப்புக்கு வழங்கப்படும்" என ஹர்ஜீவ் கந்தாரி தெரிவித்தார்.

செனிசிஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு, உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கான கடிகாரத்தின் விலை 'ஜஸ்ட்' ரூ.1.50 கோடி...!!!

மும்பை- நியூயார்க் இடையே உலகின் அதிக கட்டண விமான சேவை அறிமுகம்!

உலகின் காஸ்ட்லியான டாப் - 10 ரோல்ஸ்ராய்ஸ் கார்களும், அதன் சிறப்புகளும்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Guinness World Record for the World's Most Expensive Set of Tyres has been claimed by new set of tyre manufactured by Dubai-based Z-Tyre. This set of tyres uses both gold and diamonds in construction of tyres which cost around Rs. 4.02 crore ($600,000). 295/35 ZR21 107Y XL tyres are done up with 24 Carat gold and specially selected diamonds. To know more, check here...
Story first published: Friday, June 17, 2016, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X