டெல்லி ஆட்டோ கண்காட்சியில் கார்கள்- டிரெயிலர்

இந்திய மார்க்கெட்டுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான புதிய மாடல்களை வரிந்து கட்டிக்கொண்டு டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கின்றன. பார்வையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் கவர்வதற்காக தங்களது அரங்கை புத்தம் புதிய தங்களது புதிய மாடல்களால் அலங்கரிக்க அனைத்து நிறுவனங்களும் கடந்த ஒரு மாதமாக கடும் பிரத்யேனம் எடுத்துக்கொண்டு அலங்கரித்துள்ளன.

2012 Delhi Auto Expo live updates


டெல்லி ஆட்டோ கண்காட்சியின் தங்களது அரங்குகளில் பல முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மற்றும் பைக்குகள் பற்றிய முன்னோடத்தை பார்க்கலாம்.

ஆடி:

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது ஏ-3 செடான் கார் கான்செப்ட் மாடல், ஏ-4 செடான் கார் மற்றும் க்யூ-3 எஸ்யூவி ஆகியவற்றை காட்சிக்கு வைக்க இருக்கிறது.

பிஎம்டபிள்யூ:

அதிக திறன் எஞ்சின் கொண்ட எம்-5 சொகுசு செடான் காரை பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்த இருக்கிறது. தவிர, தனது துணை பிராண்டான மினி பிராண்டு கார்களான மினி கன்ட்ரிமேன், மினி கன்வெர்ட்டிபிள் மற்றும் ஜான் கூப்பர் எஸ் கார்களும் பிஎம்டபிள்யூ அரங்கை அலங்கரிக்கும்.

ஃபோர்டு:

ஃபியஸ்ட்டா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட 2012ம் ஆண்டு ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் ஃபோர்டு அரங்கை அலங்கரிக்கும். சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 4 மீட்டருக்குள் நீளம் கொண்ட கார் என்பதால் அரசிடமிருந்து வரிச்சலுகை பெறும் என்பதால் சரியான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்ஸ் மோட்டார்ஸ்:

ஏபிஎஸ் மற்றும் 4 வீல் டிரைவ் ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இதுதவிர, வர்த்தக ரீதியிலான புதிய பயணிகள் வாகனங்களையும் காட்சிக்கு வைக்கிறது.

ஹோண்டா:

புதிய சிவிக் மற்றும் தனது என்எஸ்எக்ஸ் சூப்பர் கார் மாடல்களை ஹோண்டா காட்சிக்கு வைக்கிறது.

ஜெனரல் மோட்டார்ஸ்:

செவர்லே செயில் ஹேட்ச்பேக் கார் மற்றொர புதிய ஹேட்ச்பேக் மற்றும் புதிய செடான் கார் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் காட்சிக்கு வைக்க உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர்:

டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் டிஃபென்டர் கான்செப்ட் டிசி100, சிஎக்ஸ் 75 மற்றும் சிஎக்ஸ் 16 கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்துகிறது. இதில், வரும் 2015ம் ஆண்டு விற்பனைக்கு கொண்ட வரப்பட இருக்கும் சிஎக்ஸ் 75 காருக்கு இப்போதே புக்கிங் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா:

மினி ஸைலோ, மினி வெரிட்டோ செடான் கார் மற்றும் தனது துணை பிராண்டான சாங்யாங் மோட்டார்ஸ் எஸ்யூவி மாடல்களை ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ளது.

மாருதி:

எர்டிகா எம்யூவி, புதிய கான்செப்ட் மாடல் எஸ்யூவி ஆகியவற்றை மாருதி பார்வைக்கு வைக்கிறது. தவிர, ஸ்விப்ட் ஸ்போர்ட் மற்றும் ஸ்விப்ட் எலக்ட்ரிக் கார் மாடல்களையும் மாருதி அரங்கை அலங்கரிக்க உள்ளது.

ரினால்ட்:

புளூயன்ஸ், கோலியோஸ் எஸ்யூவியை தொடர்ந்து பல்ஸ் ஹேட்ச்பேக் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் முறைப்படி ரினால்ட் அறிமுகம் செய்கிறது. தவிர, டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியையும் ரினால்ட் பார்வைக்கு வைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ்:

எஸ்எல்ஸ் ரோட்ஸ்டெர் மற்றும் குறைந்த விலையில் பி-கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் காட்சிக்கு வைக்க உள்ளது. தவிர, எம்எல்-கிளாஸ் எஸ்யூவியும் பென்ஸ் அரங்கை ஜொலிக்க வைக்கும்.

நிசான்:

லீஃப் எலக்ட்ரிக் காரை நிசான் பார்வைக்கு வைக்கிறது. தவிர, ஜிடி-ஆர் ஸ்போர்ட்ஸ் காரும் நிசான் அரங்கை கவர செய்யும்.

ஸ்கோடா:

மிஷன் எல் கான்செப்ட் கார் மாடல் மற்றும் புதிய செடான் கார் மாடல்களை ஸ்கோடா பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்த இருக்கிறது. ஃபேபியா ஆர்எஸ் 2000 மற்றும் ஃபேபியா ஸ்கவுட் ஆகிய புதிய மாடல்கள் ஸ்கோடா ஸ்டாலில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், தனது புதிய பிராண்டு சின்னத்தையும் ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்ய உள்ளது.

பியூஜியட்:

இந்திய மார்க்கெட்டில் இரண்டாவது இன்னிங்சை துவங்குவதற்காக தனது 208 ஹேட்ச்பேக் மற்றும் 508 செடான் கார்களை பியூஜியட் பார்வைக்கு வைக்கிறது.

டாடா மோட்டார்ஸ்:

நானோ டீசல் மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தவிர, புதிய மெர்லின் சஃபாரி எஸ்யூவியும் டாடா மோட்டார்ஸ் அரங்குக்கு அதிக பார்வையாளர்களை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டோ:

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை டொயோட்டோ பார்வைக்க வைக்க உள்ளது. புதிய கேம்ரி பிரிமியம் செடான் காரும் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

வோக்ஸ்வேகன்:

சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம் கொண்ட தனது புளூமோஷன் டெக்னாலஜீயை ஆட்டோ கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களிம் விளக்க வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. தவிர, அப், ஜெட்டா, பீட்டில் ஆகிய கார்கள் வோக்ஸ்வேகன் அரங்கை அலங்கரிக்க உள்ளன.

Most Read Articles
English summary
Here are given 2012 Delhi auto expo preview of the cars details.
Story first published: Thursday, January 5, 2012, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X