இந்தியாவின் முதல் சூப்பர் காரை அறிமுகப்படுத்தினார் அமிதாப் பச்சன்

பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா வடிவமைத்த இந்தியாவின் முதல் சூப்பர் காரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்தார்.


இந்தியாவின் பிரபல கார் டிசைனரான திலீப் சாப்ரியா டிசி என்ற பெயரில் கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது வடிவமைப்பு மையத்தின் மூலம் இந்தியாவின் முதல் சூப்பர் காரை திலீப் சாப்ரியா வடிவமைத்திருக்கிறார்.

இந்த சூப்பர் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இந்த புதிய சூப்பர் காருக்கு டிசி அவந்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் ஃபோர்டு ஈக்கோ பூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள டிசி டீலர்கள் மூலம் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ரூ.30 லட்சம் விலையில் இந்த புதிய சூப்பர் கார் விற்பனை செய்யப்பட இருப்பதாக திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
India's first super car DC Avanthi has unveiled by Bollywood star Amithab Bachan in Delhi auto expo. The DC Avanthi will be commercially launched by next year.
Story first published: Tuesday, January 10, 2012, 10:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X