இந்தியாவில் மினி பிராண்டு கார்களை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ

ஈடு இணையற்ற வடிவமைப்பு, தரமான கட்டுமானம் கொண்ட மினி பிராண்டின் மூன்று கார் மாடல்களை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது.

Mini Cooper

பிரிட்டனை சேர்ந்த மினி கார் நிறுவனம் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனம் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் மினி பிராண்டுக்கு முக்கிய இடம் இருப்பதை உணர்ந்து பிஎம்டபிள்யூ டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மினி பிராண்டின் மூன்று கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

மினி கூப்பர், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் மற்றும் மினி கூப்பர் கன்ட்ரிமேன் ஆகிய கார் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மினி கார்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையிலும் பிஎம்டபிள்யூ அடியெடுத்து வைத்துள்ளது.

அதிக சக்திவாய்ந்த எஞ்சின்களை கொண்ட இந்த மூன்று கார் மாடல்களிலும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து மினி கார் மாடல்களும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

மினி கூப்பர் ரூ.24.90 லட்சத்திலும், மினி கூப்பர் எஸ் ரூ.27.90 லட்சம் விலையிலும், மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் ரூ.29.99 லட்சம் விலையிலும், மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ரூ.31.99 லட்சம் விலையிலும் விற்பனை செய்யப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The BMW Group has itroduced Mini premium car brand in India. The Mini cooper, Mini cooper convertible and Mini cooper s countryman are launched in India and can be ordered as imported units.
Story first published: Tuesday, January 10, 2012, 13:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X