டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பைக்குகள்-டிரெயிலர்
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டார்சைக்கிள்கள் பற்றிய முன்னோட்டத்தை இங்கே காணலாம்.

அப்ரில்லா:
சூப்பர் பைக் தயாரிப்பில் புகழ்பெற்ற அப்ரில்லா நிறுவனம் தனது ஆர்எஸ்வி-4 சூப்பர் பைக்கை ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ:
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அரங்கை ஆர்இ60 என்ற புதிய நான்கு சக்கர பயணிகள் வாகனம் அலங்கரிக்கிறது.
ஹார்லி டேவிட்சன்:
ஹார்லி டேவிட்சன் அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை. 5000க்கும் மேற்பட்ட ஆக்சஸெரீஸ்களை ஹார்லி பார்வைக்கு வைக்கவுள்ளது. தவிர, தனது பைக் மாடல்களையும் காட்சிப்படுத்த உள்ளது.
ஹீரோ மோட்டோ கார்ப்:
ஹீரோ மோட்டோ கார்ப் அரங்கை 110 சிசி புதிய பேஷன் ப்ரோ எக்ஸ், 125சிசி இக்னிட்டர் மற்றும் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் அலங்கரிக்கும்.
டிரையம்ப்:
பிரிட்டனை சேர்ந்த சூப்பர் பைக் தயாரிப்பாளரான டிரையம்ப் மோட்டோர்சைக்கிள் நிறுவனம் தனது போனிவில்லி பைக்கை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்:
புதிய 100சிசி பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, புதிய வண்ணங்களில் சிபிஆர்250ஆர் பைக்கை மற்றும் சிபிஆர் 1000 ஆர்ஆர் ஃபயர் பிளேடு சூப்பர் பைக்கை ஹோண்டா காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளது.
ராயல் என்பீல்டு:
டெசர்ட் ஸ்ட்ரோம், குரோம் கிளாசிக் புல்லட் மோட்டார்சைக்கிள்களையும், தனது கஃபே ரேஸர் பைக் மாடலையும் ராயல் என்பீல்டு காட்சிக்கு வைக்க இருக்கிறது. தவிர, தனது சொந்த பிராண்டில் ஏராளமான புதிய ஆக்சஸெரீஸ்களையும் வெளியிட இருக்கிறது.
யமஹா:
புதிய ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்த யமஹா திட்டமிட்டிருக்கிறது. தவிர, தனது ஆர்1 மற்றும் ஆர்15 வி.2.0 மோட்டோ ஜிபி பைக்கை காட்சிப்படுத்தவுள்ளது.
சுஸுகி மோட்டார்சைக்கிள்:
தனது ஹயபூசா சூப்பர் பைக், இன்டரூடர் எம் 1800, ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000,ஜிஎஸ்ஆர்750 உள்ளிட்ட தனது அனைத்து மாடல்களையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் காட்சிக்கு வைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ்:
புதிய ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை டிவிஎஸ் மோட்டார் காட்சிப்படுத்த இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது.
ஹயோசங்:
650ஆர் மற்றும் 650என் பைக்குகள், புதிய 250சிசி பைக் மாடல்களை ஹயோசங் பார்வைக்கு வைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications








