செவர்லே பிராண்டில் 15 புதிய கார் மாடல்களை காட்சிக்கு வைத்த ஜிஎம்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலையிலுள்ள மாடல்கள் உள்பட 15 மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்துள்ளது.

Tavera Neo3

டியூவல் டோன் கலர் கொண்ட புதிய தவேரா நியோ3 எம்யூவி, புதிய கேப்டிவா பிரிமியம் எஸ்யூவி, செவர்லே வோல்ட் எலக்ட்ரிக் கார், பீட் எலக்ட்ரிக் கார் ஆகியவை குறிப்பிடத்தக்க மாடல்கள்.

இதில், புதிய செவர்லே தவேரா நியோ3 எம்யூவி வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பீட்பேக் தகவல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 7 பேர் தாராளமாக அமரந்து செல்லும் சொகுசு இருக்கைகளும் இருக்கின்றன. இதில், 2.5 லிட்டர் பாரத் ஸ்டேஜ்-3 அம்சம் கொண்ட எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பாரத் ஸ்டேஜ் -4 அம்சம் கொண்ட எஞ்சின் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பார்க் எல்பிஜி மாடல், கேமரோ கன்வெர்ட்டிபிள், செவர்லே குரூஸ் ரேஸிங் கார், ஆகியவையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஆயத்தங்களுடன் டெல்லி ஆட்டோ கண்காட்சியி்ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில், சிறிய ஹேட்ச்பேக் காரான ஸ்பார்க் எல்பிஜி மாடல் வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
General Motors India is showcasing 15 production and concept vehicles at the 11th Auto Expo, which opened today in New Delhi. The vehicles are being displayed on Chevrolet’s stand under the three themes of Chevrolet Next, Chevrolet Technology & Innovation and Chevrolet Performance. 
Story first published: Thursday, January 5, 2012, 16:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X