யமஹா ஆர்-15க்கு நேரடி போட்டியாக சிபிஆர்150ஆரை களமிறக்கிய ஹோண்டா

புதிய 150சிசி சிபிஆர் ஸ்போர்ட்ஸ் பைக், 110 சிசி யுவா பைக் மற்றும் புதிய டியோ ஸ்கூட்டர் உள்பட மொத்தம் 7 புதிய மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Honda CBR 150R

இதில், புதிய சிபிஆர் 150ஆர் பைக் இந்திய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள யமஹா ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்குக்கு நேரடி போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய சிபிஆர் 150ஆர் பைக்கின் வடிவமைப்பு 250 சிசி ஸ்போர்ட்ஸ் பைக்ககுளுக்கு ஒத்ததாக இருப்பதால் நிச்சயமாக இளைஞசர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக்குகள், மோனோ சஸ்பென்ஷன், கம்பீரமான தோற்றத்தை கொடுக்கும் பாடி பேனல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் என அசத்துகிறது புதிய சிபிஆர்150ஆர்.

சிபிஆர் 150ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 10,500 ஆர்பிஎம் வேகத்தில் 18 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

ரைடிங்கின்போது அதிக பேலன்ஸ் தரும் வகையில் இரட்டை பிரேம்களுடன் புதிய சிபிஆர்150ஆர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் புதிய சிபிஆர் 150ஆர் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் சிபிஆர் 250ஆர் ரூ.1.60 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதிய 150 சிசி சிபிஆர் ரூ.1.20 லட்சத்துக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதால் இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda Motorcycles has launched 7 new models in Delhi auto expo. The new CBR 150R sports will tought competition to Yamaha R-15.
Story first published: Saturday, January 7, 2012, 14:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X