டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மாருதி எர்டிகா அறிமுகம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எர்டிகா எம்பிவி காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது மாருதி.

Maruti Ertiga

டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ ஆகிய கார்களுக்கு போட்டியாக மாருதியிடமிருந்து வரும் கார் என்பதாலும், மற்ற கார்களைவிட குறைந்த விலையில் வரும் என்பதாலும் எர்டிகா மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது எர்டிகாவை காட்சிப்படுத்தியுள்ளது மாருதி. உற்பத்தி நிலையிலுள்ள காராக எர்டிகா பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

புதிய எர்டிகாவின் பெட்ரோல் மாடலில் கே14 சூப்பர் டர்போ டிடிஐஎஸ் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 94 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இதேபோன்று, டீசல் எஞ்சின் 88 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

உட்புறத்தில் டேஷ்போர்டு ஸ்விப்ட் காரின் டேஷ்போர்டை ஒத்தாக உள்ளது. 7 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட புதிய எர்டிகா டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

வரும் மார்ச் இறுதி வாரத்திலோ அல்லது ஏப்ரல் மாதத்தில் புதிய எர்டிகா விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Maruti has unveiled Ertiga MPV in Delhi auto Expo. The new MPV will be commercially launched in April,sources said.
Story first published: Monday, January 9, 2012, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X