புதிய காம்பெக்ட் எஸ்யூவி கான்செப்ட் மாடல்: மாருதி அறிமுகம்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை மாருதி சற்றுமுன் பார்வைக்கு அறிமுகப்படுத்தியது.

Maruti XA Alfa

எக்ஸ்ஏ அல்ஃபா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கான்செப்ட் மாடல் எஸ்யூவியை மாருதி நிறுவனத்தின் 5 வடிவமைப்பு எஞ்சினியர்கள் சுஸுகி மோட்டார் நிறுவனத்தின் எஞ்சினியர்களுடன் இணைந்து உருவாக்க்கியுள்ளனர்.

கடந்த 10 மாத முயற்சியில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கான்செப்ட் மாடல் எஸ்யூவி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுஸுகி சிஇஓ சின்ஷோ நகனிஷி கூறியதாவது," வாடிக்கையாளர் வாழ்க்கை முறை மாற்றத்திற்கு தக்கவாறு அதிக வாகன மாடல்கள் மார்க்கெட்டுக்கு வருகின்றன.

அந்த வகையில், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டு புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவோம். இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி சுஸுகி-மாருதி எஞ்சினியர்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர, கே-சீரிஸ் எஞ்சின்கள் மற்றும் புதிய டீசல் மாடல்களை அறிமுகப்படுத்தவும் முக்கியத்துவம் கொடுப்போம்," என்று கூறினார். மாருதியின் புதிய எஸ்யூவி லேண்ட் ரோவர் இவோக் எஸ்யூவியின் மினியேச்சர் போன்று இருக்கிறது.

Most Read Articles
English summary
Country's largest car maker Maruti Suzuki has unveiled new compact suv in Delhi auto expo today. The new suv christined XA Alfa.
Story first published: Thursday, January 5, 2012, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X