ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங் அகடமியை திறந்தது மெர்சிடிஸ் பென்ஸ்

முறையான கார் டிரைவிங் பயிற்சியை அளிக்கும் வகையில், புதிய டிரைவிங் அகடமியை மெர்சிடிஸ் பென்ஸ் இன்று துவங்கியுள்ளது. இந்த அகடமியில் ஜெர்மனியிலிருந்து வரும் சிறந்த வல்லுனர்களை கொண்டு டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவி்த்துள்ளது.

Benz Driving Academy

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவதற்காக இந்திய இளைஞர்கள் மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிரைவிங் பயிற்சியை அளிப்பதற்காக புதிய டிரைவிங் பயற்சி அகடமியை துவங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இன்று முறைப்படி தனது டிரைவிங் பயிற்சி அகடமியை துவங்குவதாக அறிவித்துள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் இந்த அகடமி மூலம் டிரைவிங் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளது.

ஆண்டுக்கு 4 மாதங்கள் இந்த பயிற்சிகள் நடைபெறும் வகையில் அட்டவணை செய்யப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி வார இறுதியில் 8 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

அடிப்படை கார் டிரைவிங், ஸ்டீயரிங் கன்ட்ரோல், லேன் சேஞ்சிங், பிரேக் பிடிப்பதற்கான டெக்னிக மற்றும் மோதல்களை தவிர்ப்பது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.

புத் இன்டர்நேஷனல் பந்தய டிராக்கில் வைத்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வரும் மார்ச் 16ந் தேதி முதல் குழுவிற்கான பயிற்சிகள் துவங்கப்பட இருக்கின்றன. ஜெர்மனியிலிருந்து வரும் டிரைவிங் பயிற்சி நிபுணர்கள் டிரைவிங் பயற்சிகளை வழங்குவர்.

இந்த பயிற்சியில் கலந்துகொள்வதற்கு ரூ.75,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் குழுவினருக்கு அறிமுக சலுகையாக ரூ.50,000 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

கற்பித்தல் மற்றும் செயல்முறை வழி என இரண்டு பிரிவுகளாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

Most Read Articles
English summary
Germany luxury car maker Mercedes Benz has launched of its sports car driving academy in Delhi auto expo. The training programs will be started on march 16th in Buddh international circuit.
Story first published: Wednesday, January 4, 2012, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X