டொயோட்டோ இன்னோவா பங்காளி நிசான் இவாலியா அறிமுகம்!

டொயோட்டோ இன்னோவாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில், இவாலியா என்ற புதிய எம்பிவியை நிசான் அறிமுகம் செய்துள்ளது.

Nissan Evalia

7 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்ட இவாலியாவில் மூன்று வரிசை இருக்கைகளும் முன்னோக்கி இருக்கிறது. பக்கவாட்டில் தள்ளித் திறக்கும் வகையில் ஸ்லைடர் கதவுகளை கொண்டுள்ளதால் ஏறி இறங்குவதற்கு அதிக வசதியாக இருக்கும். உட்புறம் தாராள வசதியை கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு மத்தியில் சென்னை அருகிலுள்ள ஒரகடம் ஆலையில் இவாலியா உற்பத்தியை துவங்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், அருமையான சஸ்பென்ஷன், புதுமையான கியர் லிவர் உள்ளிட்ட அம்சங்கள் இவாலியாவுக்கு கூடுதல் பலம்.

புதிய இவாலியாவில் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 85 பிஎஸ் முதல் 105 பிஎஸ் வரை பவரை வெளிப்படுத்தும். இந்த புதிய நிசான் இவாலியா எம்பிவி குறித்து ஏற்கனவே என்வி-200 என்ற குறியீட்டு பெயரில் நாம் செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Nissan has launched New MPV named Evalia in Delhi auto expo. The Evalia will give tough competition to Toyota Innova.
Story first published: Friday, January 6, 2012, 10:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X