மைக்ரா நகல் பல்ஸ் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியது ரினால்ட்

ரூ.5.77 லட்சம் முதல் ரூ.6.77 லட்சம் வரையிலான விலையில் புதிய பல்ஸ் ஹேட்ச்பேக் காரை ரினால்ட் நிறுவனம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் சற்றுமுன் அறிமுகப்படுத்தியது. டீசல் மாடலில் மட்டும் பல்ஸ் மார்க்கெட்டிற்கு வருகிறது.

Renault Pulse

தனது கூட்டணி நிறுவனமான நிசான் நிறுவனத்தின் மைக்ரா ஹேட்ச்பேக் காரின் பிளாட்பார்மிலேயே பல்ஸ் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கும் அச்சு அசலாக மைக்ராவை போன்றே இருக்கிறது.

ஆனால், ரினால்ட் நிறுவனத்தின் பேட்ச் மட்டும் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்திய நாடித்துடிப்பை பல்ஸ் பார்த்து டீசல் மாடலில் மட்டும் புதிய பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புளூயன்ஸ் பிரிமியம் செடான் கார், கோலியோஸ் எஸ்யூவியை தொடர்ந்து ரினால்ட் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் மூன்றாவது கார் மாடல் பல்ஸ்.

டிரைவர் சைடு ஏர்பேக், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட ஏராளமான நவீன வசதிகளுடன் பல்ஸ் வந்துள்ளது. டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், டைமருடன் கூடிய ரியர் டிஃபாகர், ரூப் ஸ்பாய்லர், பனி விளக்குகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

புதிய பல்ஸ் ஹேட்ச்பேக் காரில் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 64 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். புதிய பல்ஸ் ஹேட்ச்பேக் காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ,க்கான வாரண்டியை வழங்குவதாக ரினால்ட் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, டஸ்ட்டர் காம்பெக்ட் எஸ்யூவியையும் ரினால்ட் இன்று அறிமுகம் செய்யவுள்ளது.

Most Read Articles
English summary
French car maker Renault has launched Pulse hatchback at Delhi auto expo today. The pulse equipped with 1.5 liter K9K diesel engine.
Story first published: Friday, January 6, 2012, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X