டெல்லி கண்காட்சியில் கூட்டத்தை கூட்டிய ஸ்கோடா கார்

தனது ஆர்ப்பரிக்கும் வடிவமைப்பால் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோடா ஆர்எஸ் 2000 ரோட்ஸ்டெர் கார் பார்வையாளர் கூட்டத்தை ஸ்கோடா அரங்கில் கூட்டியது.

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஃபேபியா மான்ட்டே, ஆர்எஸ் 2000 ரோட்ஸ்டெர் ஆகிய கார்களை பார்வைக்கு வைத்து அசத்தியது.

இதில், ஃபேபியா மான்ட்டோ கார் மாடல் மான்ட்டே கார்லோ ராலி பந்தயத்தில் பங்கேற்று 110 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் ஸ்கோடா உருவாக்கியுள்ள மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, எஸ்2000 ராலி பந்தயத்தை கொண்டாடும் வகையில் புதிய ஆர்எஸ் 2000 ரோட்ஸ்டெர் கார் மாடலை ஸ்கோடா வடிவமைத்துள்ளது.

புகை பூச்சு போன்ற கருப்பு நிற பின்புலம் கொண்ட ஹெட்லைட்டுகள், பக்கவாட்டில் கண்ணாடிகளால் சூழப்பட்ட அரண் போன்ற ஆர்எஸ் 2000 ரோட்ஸ்டெர் கன்வெர்ட்டிபிள் கார் கண்காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது.

இதுதவிர, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரேபிட் செடான் கார் மற்றும் ஆர்எஸ் சலூன் மாடலையும் ஸ்கோடா தனது அரங்கில் காட்சிக்கு வைத்திருந்தது.

Most Read Articles
English summary
Skoda auto has showcased RS2000 roadster and Fabia monte cars in Delhi auto expo. The company also showcased Rapid sedan and Rs Saloon model in the expo.
Story first published: Wednesday, January 11, 2012, 12:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X