புதிதாக 3 வாகனங்களை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் புதிய சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி மற்றும் நானோ சிஎன்ஜி கான்செப்ட் மாடல் உள்ளிட்ட புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்துள்ளது.


தவிர, அல்ட்ரா வரிசையில் புதிய நடுத்தர ரக வர்த்தக வாகனங்கள் மற்றும் புதிய எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஸ்டார்பஸ் கான்செப்ட் மாடல்கள், டாடா மான்ஸா டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் செடான் கார், நானோ பிக்ஸல் கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்துள்ளது.

தவிர, எல்பிடி 3723 என்ற இந்தியாவின் முதல் 5 ஆக்சில் ரிஜிட் டிரக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய சஃபாரி ஸ்டோர்ம் 4 வீல் டிரைவ் கொண்டதாக வந்துள்ளது. தவிர, புதுப்பொலிவு பெற்ற வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகள் சஃபாரியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

புதிய சஃபாரி ஸ்ட்ரோமில் பொருத்தப்பட்டிருக்கும் 2.2 லிட்டர் டிகோர் எஞ்சின 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

இதேபோன்று, சிஎன்ஜியில் செல்லும் புதிய நானோ கார் கான்செப்ட் மாடல் எதிர்கால சந்தையில் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். டாடா மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்திருக்கும் கான்செப்ட் மாடல்கள் அடுத்த நிதி ஆண்டில் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors today unveiled at the New Delhi Auto Expo 2012 the Tata Safari Storme, the new generation Safari SUV, the Tata Ultra, the company's new LCV & ICV range, and the Tata LPT 3723, India's first 5-axle rigid truck. They will be commercially launched in the next financial year.delhi auto expo 2012, tata motors, tata safari strom, டெல்லி ஆட்டோ கண்காட்சி 2012, டாடா மோட்டார்ஸ்,
Story first published: Thursday, January 5, 2012, 18:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X