இந்தியா வரும் 2012 மாடல் டொயோட்டோ கேம்ரி பிரிமியம் கார்

வரும் மூன்றாவது காலாண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 2012ம் ஆண்டு கேம்ரி பிரிமியம் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக டொயோட்டோ அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

2012 Toyota Camry

கடந்த 1997ம் ஆண்டு முதல் அமெரிக்க மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காராக டொயோட்டோ கேம்ரி திகழ்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 3,27,804 கேம்ரி கார்கள் அங்கு விற்பனையாகியுள்ளது.

அமெரிக்க சந்தை தவிர ஏராளமான நாடுகளில் சிறந்த பிரிமியம் கார் என்ற பெருமையை டொயோட்டோ கேம்ரி பெற்றுள்ளது. மேலும், டொயோட்டோவின் துணை பிராண்டான லெக்ஸஸ் பிராண்டின் பெரும்பாலான கார் மாடல்கள் கேம்ரியின் பிளாட்பார்மில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு, வடிவமைப்பு, தரம், தாராள இடவசதி என அனைத்திலும் முத்திரை பதித்த கேம்ரியை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை டொயோட்டோ மேம்படுத்தி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது 7 வது தலைமுறை மாடல் கேம்ரியை டொயோட்டோ பல்வேறு நாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

2012 மாடல் கேம்ரி என்ற பெயருடன் மார்க்கெட்டில் களமிறங்கியுள்ள கேம்ரிவையை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

முந்தைய மாடலைவிட 155 பவுண்டு எடை குறைந்துள்ள புதிய கேம்ரி பழைய மாடலில் உள்ள அதே 2.5 லிட்டர் மற்றும் 3.5 லிட்டர் (வி6) எஞ்சின்களுடன் வருகிறது. எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்,டியூவல் ஸோன் ஏசி, ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகிய வசதிகளை கேம்ரி பெற்றுள்ளது.

டிவிடி பிளேயர், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட்டுகளுடன் கூடிய ஒருங்கிணைந்த டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆகிய வசதிகளுக்கும் குறைவில்லை. ஆடியோ, எம்ஐடி, புளூடூத் ஹெட்போன் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் ஸ்விட்சுகளும் இருக்கின்றன.

கீ லெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கேம்ரி வருகிறது. தானியங்கி அட்ஜெஸ்ட்மென்ட்டுடன் கூடிய எச்ஐடி ஹெட்லைட்டுகள், வாஷர் வசதிகளும் உண்டு.

6 ஸ்டெப் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட டிரைவர் மற்றும் பயணிகள் பவர் இருக்கைகள் கேம்ரியின் பிரிமியத்திற்கு சான்று. மேலும், பயணத்தின்போது தங்களது வசதிக்கேற்ப இருக்கைகளை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால் அலுப்பில்லா பயண அனுபவத்தை பெறலாம்.

இந்திய பிரிமியம் கார் மார்க்கெட்டில் போட்டி போட தயாராகிவிட்ட கேம்ரி மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெறும் என்று டொயோட்டோ கூறியுள்ளது.

Most Read Articles
English summary
Toyota has announced the preview of the all new Toyota Camry, slated to be launched in the third quarter of 2012. In order to create a new wave of attraction to this legendary cornerstone of the Toyota brand, the Camry now has undergone many changes. Further enhancing its QDR standards, the Camry has top of class quietness, further enhanced ride comfort, superior interior design, quality, spaciousness and comfort and an enhanced sense of safety.
Story first published: Thursday, January 19, 2012, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X