மஹிந்திரா ஸ்கார்பியோவை விட 4 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர் கார்! 27 கிமீ மைலேஜை வேற வாரி வழங்குது!

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய 7 சீட்டர் கார்களுக்கு (7 Seater Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 7 பேர் பயணம் செய்ய முடியும் என்பதை கடந்து, தேவைப்பட்டால் இருக்கைகளை மடக்கி வைத்து கொண்டு, அதிக லக்கேஜ்களையும் இந்த கார்களில் கொண்டு செல்ல முடியும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) போன்ற கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் 7 சீட்டர் மாடலின் ஆரம்ப விலை 13 லட்ச ரூபாயாக உள்ளது.

Maruti Suzuki Ertiga Airbags

இது மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex Showroom Price) ஆகும். ஆனால் இதை விட குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை வாங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், உங்களுக்கு மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக காரான மாருதி சுஸுகி எர்டிகாவின் ஆரம்ப விலை வெறும் 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதாவது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 4.20 லட்சம் குறைவான விலையில், மாருதி சுஸுகி எர்டிகா காரை உங்களால் வாங்கி விட முடியும்.

Maruti Suzuki Ertiga

அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 12.94 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதாவது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வசதிகளும் நிரம்பிய டாப் வேரியண்டை நீங்கள் வாங்கி விடலாம்.

இதன் காரணமாக இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் 7 சீட்டர் காராக மாருதி சுஸுகி எர்டிகா உள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரை வாடிக்கையாளர்கள் எந்த அளவிற்கு விரும்புகின்றனர்? என்பதற்கு தற்போது வெளியாகியுள்ள அதன் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஒரு உதாரணம்.

மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,807 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 14,868 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 2,939 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 19.77 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars February 2026), மாருதி சுஸுகி எர்டிகா 6வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), டாடா பன்ச் (Tata Punch), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்கள் உள்ளன.

இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள அனைத்துமே 5 சீட்டர் ஆகும். அதாவது நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையான 7 சீட்டர் கார் என்றால், அது மாருதி சுஸுகி எர்டிகாதான்.

மாருதி சுஸுக எர்டிகா காரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், சுஸுகி கனெக்ட் தொழில்நுட்பம், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர், இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் போன்ற வசதிகளையும் மாருதி சுஸுகி எர்டிகா கொண்டுள்ளது.

குறைவான விலை, அட்டகாசமான வசதிகள் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், மைலேஜிலும் மாருதி சுஸுகி எர்டிகா அசத்துகிறது. மாருதி சுஸுகி எர்டிகா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், அதிக வசதிகள் நிரம்பிய, அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு 7 சீட்டர் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, March 1, 2026, 18:31 [IST]
English summary
Maruti suzuki ertiga registers 20 per cent growth in february 2026 most sold 7 seater car
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+