டிவிஎஸ் உருவாக்கிய புதிய கியூப் ஹைபிரிட் ஸ்கூட்டர்

பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் டிவிஎஸ் மோட்டார்ஸ் பார்வைக்கு வைத்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் வாகனங்களை தயாரிப்பதற்கும் பெரும்பாலான நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், லீப் என்ற ஹைபிரிட் ஸ்கூட்டரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருக்கிறது.

இதேபோன்று, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் கியூப் என்ற புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் வைத்துள்ளது.

இந்த புதிய ஸ்கூட்டரில் பெட்ரோல் மற்றும் பேட்டரி மோடில் இயங்குவதை காட்டும் எல்சிடி டிஸ்ப்ளே, சக்தியை சேமிக்கும் பிரேக்கிங் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

அழகிய வடிவமைப்புடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள இந்த புதிய ஹைபிரிட் ஸ்கூட்டர் எதிர்கால சந்தையில் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Most Read Articles
English summary
Tvs motors has showcased new Hybrid scooter in Delhi auto expo. The new hybrid scooter christined as Qube and have more next generation features.
Story first published: Tuesday, January 10, 2012, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X