வோக்ஸ்வேகன் அரங்கை அலங்கரித்த பீட்டில், டூரக் எஸ்யூவி

டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தலைமுறைகளை கடந்து நிற்கும் வடிவமைப்பு கொண்ட புதிய பீட்டில், டூரக் எஸ்யூவி, எக்ஸ்எல்-1 கான்செப்ட் மாடல், ஃபேட்டன் கார் மாடல்களை வோக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்து அசத்தியிருந்தது.

Volkswagen Touareq

இதில், பீட்டில் கார் அனைவரின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்தது. மேலும், அந்த நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் டூரக் எஸ்யூவி வரும் ஏப்ரல் முதல் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்க வரும் புதிய டூரக் எஸ்யூவி 3.0 லிட்டர் வி6 டிடிஐ எஞ்சின் 245 பிஎஸ் பவரை அள்ளி இறைக்கும் வல்லமை பொருந்தியது. இந்த எஸ்யூவி 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸை கொண்டது.

இது ஆல் வீல் டிரைவ் கொண்ட பிரிமியம் எஸ்யூவியாக மார்க்கெட்டில் நுழைகிறது. இதுதவிர, டே டைம் ரன்னிங் லைட்டுகள், இஎஸ்பி தொழில்நுட்பம், உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

மேலும், லிட்டருக்கு 111 கிமீ மைலேஜ் கொடுக்கும் கான்செப்ட் மாடல் எக்ஸஎல்-1 கார் மாடலையும், ஃபேட்டன் காரையும் வோக்ஸ்வேகன் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்து அழகு பார்க்கிறது.

Most Read Articles
English summary
Germany car maker Volkswagen showcased 2012 model Beetle, Toureq, XL1 concept and Phaton car models in Delhi auto expo.
Story first published: Friday, January 6, 2012, 16:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X