டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்திய யமஹா

இந்த ஆண்டு மத்தியில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தனது புதிய ரே ஸ்கூட்டர் மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தது யமஹா.

Yamaha Scooter

யமஹாவின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இந்திய இளசுகள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. கம்பீரமான தோற்றம் கொண்ட யமஹாவின் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றன.

இந்த நிலையில், தனது விற்பனை வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், பவர் ஸ்கூட்டர்களுக்கு மார்க்கெட்டில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளதை கருத்தில்க்கொண்டும் இந்தியாவில் தனது ஸ்கூட்டர் மாடல்களையும் களமிறக்க யமஹா முடிவு செய்துள்ளது.

இதற்காக, தனது ஸியோன் 125, ஃபினோ மற்றும் மியோ ஸ்கூட்டர் மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தது யமஹா. இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் தற்போது வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில், ரே என்ற கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது இந்த ஸ்கூட்டர் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ஸ்கூட்டர் 100 சிசி முதல் 125 சிசிக்குள் திறன் கொண்ட எஞ்சினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உள்ளிட்ட விபரங்கள் வர்த்தக ரீதியிலான் அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Yamaha has unveiles of its scooter models in Delhi auto expo. The new model christined Ray will be launched in mid of the year.
Story first published: Thursday, January 12, 2012, 16:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X